sj-suryaஎஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் பவன் கல்யாண், பூமிகா நடிப்பில் 2001-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் குஷி. இது விஜய் நடித்த தமிழ் குஷியின் ரீமேக் தான். தமிழை போலவே ஆந்திராவிலும் இப்படம் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகபோவதாகவும் இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் ஏ.எம். ரத்னம் அவர்களே தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.