Connect with us
boomerang-movie

குஷ்புவும் டி.ராஜேந்தரும் எஸ்கேப்! குஸ்திக்கு தயாரானார் விஷால்! முதல் சப்போர்ட்டே கமல்தான்!

t rajendar kushbu

News | செய்திகள்

குஷ்புவும் டி.ராஜேந்தரும் எஸ்கேப்! குஸ்திக்கு தயாரானார் விஷால்! முதல் சப்போர்ட்டே கமல்தான்!

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவின் பதவி காலம் முடிகிறது. தமிழ்சினிமாவின் உச்சிக்குடுமியை கையில் வைத்திருக்கும் சங்கமாச்சே? நான் நீ என்று தாணுவின் இடத்தை கைப்பற்ற பலத்த போட்டி நிலவி வரும் நிலையில், தனது நடிகர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பை ஒரு கை பார்க்க வேண்டும் என்று விரும்பினார் விஷால். தனது சார்பாக தலைவர் பதவிக்கு குஷ்பு நிற்பார் என்றும் அறிவித்தார். அதெல்லாம் இப்போ பழங்கதை ஆகிவிட்டது. இப்போது நிலைமையே வேறு.

யெஸ்… ‘இந்த தேர்தலும் வேணாம். போட்டியும் வேணாம்’ என்று ஒரேயடியாக ஒதுங்கிவிட்டார் குஷ்பு. இவர்தான் இப்படி என்றால் இவரை எதிர்த்து நிற்பதாக இருந்த டி.ராஜேந்தரும் ‘நமக்கெதுக்குப்பா அதெல்லாம்? எல்லாம் வெட்டி வேலை. நான் இப்போ எக்ஸ்பயரி கண்டிஷனில் இருக்கும் லட்சிய தி.மு.க வை வளர்க்கப் போகிறேன்’ என்று கிளம்பிவிட்டார். 234 தொகுதியிலும் என் கட்சி போட்டியிடும் என்று அவர் சொல்வதையெல்லாம் கேட்டு, நாக்கு சுளுக்குகிற அளவுக்கு சிரித்துக் கொண்டிருக்கிறது தமிழகம்.

விஷாலை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கினார்கள் அல்லவா? கோர்ட் தலையிட்டு அந்த பஞ்சாயத்தையும் முடித்து வைக்க… தற்போது தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துவிட்டார் விஷால். இவரது தேர்தல் மனுவில் முன் மொழியும் கையெழுத்தே கமல்ஹாசனுடையதுதான்.

பொதுவாகவே தயாரிப்பாளர் சங்கம் சுயநலவாதிகள் பெருகிவிட்ட இடமாகிவிட்டது என்று சிறுபட தயாரிப்பாளர்கள் குமுறி வரும் நிலையில், விஷாலின் இந்த அறிவிப்பு என்ன பலனை கொடுக்குமோ? காத்திருப்போம்…

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top