சுந்தர்.சிக்கு முன்னர் தன் வாழ்வில் இவர் தான் இருந்தார் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வருசம் 16 என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் குஷ்பு. கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெற்றி நாயகியாக இருந்தவர். முதல் முறையாக, நடிகை ஒருவருக்கு கோயில் கட்டியது குஷ்புவிற்கு தான். திரைத்துறையில் இருக்கும் போதே நடிகர் பிரபுவை காதலித்ததாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

90களில் இருவரும் இணைந்து நடித்தால் படம் மாஸ் ஹிட் என இயக்குனர்கள் நம்பினார்கள். இருவரும் பல வெற்றி படங்களில் நடித்து பெஞ்ச் மார்க்கை உருவாக்கினர். பிரபுவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் வதந்திகள் அரசல்புரசலாக அதிகரித்தது. ஏன்? இருவருக்கும் திருமணமே முடிந்து விட்டதாகவும், ஒன்றாக குடும்பம் நடத்தி வருவதாகவும் பேச்சுகள் அடிப்பட்டது.

பலகாலமாக உலாவி வரும் இந்த விவகாரத்திற்கு நடிகை குஷ்பு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இதுகுறித்து, மனம் திறந்துள்ள அவர், ஆம் எனக்கும் பிரபுவிற்கும் அழகிய உறவு இருந்தது உண்மை தான். அது அழகான தருணம். அது விரைவில் முடிவுற்றது. அதை தொடர்ந்து, சுந்தர்.சி என்னும் அழகான உறவு என் வாழ்வில் மலர்ந்தது. இப்போது இது தான் நிலையான உறவு. இதை யாராலும் பிரிக்க முடியாது.

kushbooo

பிரபுவுடனான என் உறவை இப்போது பேசுவதில் என்ன பயன்? பேரன், பேத்தி எடுத்து சந்தோஷமாக இருக்கும் அவரை ஏன் சங்கடப்படுத்த வேண்டும். எனக்கும் 18 வயதில் மகள்கள் இருக்கிறார்கள். என் வாழ்வில் அதிக அழகிய தருணங்கள் இருக்கிறது. என்னிடம் சுந்தர் சி காதலை சொன்ன போது கூட திருமணத்தை மனதில் வைத்து தான் செய்தார். எனக்கு பிடித்திருந்தது. வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை செய்த பிறகு திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

அதன்படி, 1999ம் ஆண்டு சுந்தர் சி அழகான வீடு ஒன்றை கட்டினார். இதனை தொடர்ந்து, 2000ம் ஆண்டு எங்களது திருமணம் நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.

போதும் பாஸ் முற்றுப்புள்ளி வையுங்க!