நிஜங்கள் நிகழ்ச்சி குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை குஷ்பு பதில் அளித்துள்ளார். நிஜங்கள் பஞ்சாயத்து நிகழ்ச்சி குறித்து சிலர் நடிகை குஷ்புவை பாராட்டினாலும், சிலர் வசை பாடுகிறார்கள். அளவுக்கு மீறி பேசுபவர்களுக்கு குஷ்பு லெப்ட் அன்ட் ரைட் கொடுத்து வருகிறார். சிலர் குஷ்பு கடும் கோபம் அடையும்படி ட்வீட்டி வருகிறார்கள்.

நிஜங்கள் நிகழ்ச்சி இருக்கட்டும் முதலில் உன் குடும்பத்தை பாரு என்று கூறி கெட்ட வார்த்தை பேசிய நபருக்கு குஷ்பு போட்ட ட்வீட்டில், உன் அம்மாவை பார்த்து அப்படி பேசுடா நல்லா இருக்கும் என்றார்.

பேசுபவர்கள் பேசட்டும் மேடம். நீங்கள் அவர்களுக்கு எல்லாம் பதில் அளிக்காதீர்கள் என ரசிகர்கள் குஷ்புவை சமாதானம் செய்து வருகிறார்கள்.

@khushsundar தப்பா எடுத்துக்க வேணாம் மேம் உங்க ரசிகனாக இந்த கேள்வி என ஒருவர் நிஜங்கள் நிகழ்ச்சி குறித்து குஷ்புவிடம் ட்விட்டரில் கேட்டார்.

ரசிகர் கேட்ட கேள்விக்கு குஷ்பு அளித்துள்ள பதில், 5 விரல்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை… பலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது.. எங்கள் நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள், டாக்டர்கள், போலீஸ், கவுன்சிலிங் அளிப்பவர்கள் வருகிறார்கள்… அவர்களின் அறிவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.