“பொண்ணு கும்முன்னு குஷ்பு மாதிரி இருக்கணும்” இந்த டையலாக்க பல இடங்கள்ல கேட்டுருப்போம், பேசிருப்போம். அந்த அளவுக்கு அழகோ அழகா தமிழ் மக்கள் இதயங்களை அள்ளி சென்றவர் நடிகை குஷ்பூ அவர்கள்.

தமிழ் சினிமாவில் அதிக படங்களில் பல வருடங்களாக கதாநாயகியாய் மட்டுமே நடித்து சாதனை செய்திருப்பவர். 1980ல் வெளிவந்த The Burning Train என்னும் ஹிந்தி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் குஷ்பூ, தமிழில் இவரது முதல் படம் ரஜினி, பிரபு இணைந்து நடித்த தர்மத்தின் தலைவன்.

அன்று முதல் தமிழ் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகியாய் மிளிர்ந்தார் குஷ்பூ. திருச்சி அருகே ஒரு கிராமத்தில் இவருக்கு கோயில் கட்டினார்கள் இவரது ரசிகர்கள். அந்த அளவிற்கு இவர் மேல் பயங்கர பக்தி கொண்ட ரசிகர்கள் இன்றளவும் உள்ளனர். இட்லிக்கு கூட குஷ்பூ இட்லி என்று பெயர் சூட்டி குஷ்பூவின் புகழை கொண்டாடுகின்றனர் இங்கு.

சுந்தர் C இயக்கத்தில் வெளிவந்த முறை மாமன் என்ற படத்தின் படப்பிடிப்பில் குஷ்பூவை அவரது ரசிகர் கூட்டம் திடீரென்று சுற்றி வளைத்து பரபரப்பை ஏற்படுத்த என்ன செய்வதென்று அறியாமல் பயந்த குஷ்பூவை அவர்களிடமிருந்து காப்பாற்றி பத்திரமாக வெளியே கொண்டு வந்தார் சுந்தர் C. அது முதலே அவர் மீது காதல் வந்ததாக குஷ்பூ கூறியிருக்கிறார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

நடிப்பை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் குஷ்பூ, ஆனால் ஒரு போதும் யாருக்கும் அடிபணியாது இருந்தவர். ‘திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்ள நேரிட்டால், பாதுகாப்பாக இருப்பது முக்கியம்’ எனபதே இவரது முதல் சர்ச்சையான கருத்து. இதற்காக ஒட்டுமொத்த கட்சிகளும் குஷ்பூவிற்கு எதிராக கிளர்ச்சி செய்தன. ஆனால் பின்வாங்காது அத்தனை சர்ச்சை வழக்குகளையும் தனித்து எதிர்கொண்டு அதில் வெற்றியும் அடைந்தார். இன்று வரை இவர் மீதான சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் ஒரு போதும் இவர் அவைகளை கண்டு அஞ்சியதில்லை.

Image result for kushboo

முதலில் தி.மு.கவில் இணைந்து தற்போது காங்கிரஸ் கட்சியில் பணியாற்றுகிறார் குஷ்பூ. இனி இறக்கும் வரை தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

சினிமா துறையில் தமிழக மாநில திரைப்பட விருதான சிறந்த நடிகை விருதை பெற்றுள்ளார், கேரளாவின் சிறந்த ஜூரி விருதை பெற்றுள்ளார். கமல், சத்யராஜ் என்று பல நடிகர்கள் இங்கு பகுத்தறிவாளர்களாய் நமக்கு தெரியும், ஆனால் நடிகைகளில் குஷ்பூ ஒரு பெரியாரிஸ்ட் என்பது வெகு சிலருக்கே தெரிந்த உண்மை.

குஷ்பூவின் பிறந்த நாள் சமீபத்தில் நடந்தது. அதற்கு சிலர் அளித்த வாழ்த்துக்கள் உங்கள் பார்வைக்கு