மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆளும் கட்சிகளுக்கு எதிராக அவ்வப்போது டுவிட்டரில் கமெண்ட் வெளியிட்டு வருகிறார் கமல். அதன்காரணமாக, சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். இந்தநிலையில், சமீபத்தில், ஒரு பெண்ணை வைத்து சூதாடும் கதை. அதை இந்திய மக்கள் புனித நூலாக கருதுகிறார்கள் என்று மகாபாரத்தை பற்றி ஒரு கருத்தினை சொல்லியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது போலீசில் புகார் அளித்தது.

அதோடு, இப்படி இந்து மக்களின் புனித நூலைப்பற்றி பேசும் நடிகர் கமல்ஹாசன், பைபிள், குரானைப்பற்றி பேசுவாரா? என்றும் இந்து அமைப்புகள் அவ ருக்கு கேள்வி எழுப்பின. ஆனால் அதையடுத்து கமல் எந்தவித கருத்தும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது நடிகை குஷ்பு, கமல் சொல்வது சரிதான் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதோடு, இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி இந்து அமைப்புகள் சாதி வன்முறை செய்வதாகவும், பாஜகவை மறைமுகமாக தாக்கியுள்ளார் குஷ்பு.