Connect with us
Cinemapettai

Cinemapettai

kusboo-cinemapettai-00

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உடலை பாதியாக குறைத்த குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. 80ல் பார்த்த குஷ்பு, அப்படியே இருக்காங்க!

90களில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. குஷ்புவின் மீது உள்ள அன்பினால் அந்த காலகட்டத்திலேயே அவருக்கு கோவில் கட்டி இந்திய சினிமா நடிகைகளை வியக்க வைத்தவர்கள் அவரின் ரசிகர்கள்.

நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் சின்னத்திரைகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் குஷ்பு. சின்னத்திரையில் சீரியல்களை தயாரித்து நடித்து வருகிறார். ஆனால் பல நாட்களாக உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டும் குஷ்பூ ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது கிட்டத்தட்ட 15 கிலோ உடல் எடையை முற்றிலும் குறைத்து இளம் நாயகி போல் மாறியுள்ளார் குஷ்பு. சமீபத்தில் அவரது மகளும் உடல் எடையை குறைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kusboo-cinemapettai

kusboo-cinemapettai

அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டு தீ போல் பரவின. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து ரஜினி கமல் படங்களில் நடிக்க உடல் எடையை குறைத்தால் சுலபமாக வாய்ப்பு கிடைக்கும் என பிளான் பண்ணியுள்ளாராம்.

இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மான உடற்கட்டுடன் மாடர்ன் உடையில் குஷ்பு எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கையில் எண்பதுகளில் பார்த்தது போலவே இருக்கிறார்.

kusboo-cinemapettai-01

kusboo-cinemapettai-01

Continue Reading
To Top