Connect with us

Cinemapettai

நாங்க எல்லாம் குப்புறப்படுத்து யோகா பண்ணா கும்பமேளாவே அதிரும்.. இணையத்தை கலக்கும் குஷ்பு!

kushboo-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நாங்க எல்லாம் குப்புறப்படுத்து யோகா பண்ணா கும்பமேளாவே அதிரும்.. இணையத்தை கலக்கும் குஷ்பு!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நாயகி என்றால் அது நடிகை குஷ்பூ தான். கவர்ச்சியாக இருந்தாலும் சரி, கட்டுக்கோப்பான வேடமாக இருந்தாலும் சரி, அனைத்திலும் பிரித்து மேய்ந்தவர்.

தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒரே நடிகை. ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகை என்றால் அது குஷ்பூ தான்.

அது மட்டுமில்லாமல் ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோயில் கட்டினார்கள் என்றால் அதுவும் குஷ்புவுக்கு தான். அப்போதெல்லாம் குஷ்பு நடித்தாலே அந்த படத்திற்கு இளைஞர்கள் பட்டாளம் பெருக்கெடுத்து வருவார்கள்.

kusbhu-yoga-cinemapettai

kusbhu-yoga-cinemapettai

ஒரு கட்டத்திற்கு பிறகு பிரபல இயக்குனர் சுந்தர் சி திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். பின்னர் சினிமாவை விட்டு அரசியலில் சேர்ந்து அடிக்கடி சமூக வலைதளங்களில் சமூக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

kusbhu-yoga-cinemapettai-01

kusbhu-yoga-cinemapettai

அந்த வகையில் அவ்வப்போது ரசிகர்களுக்கும் குஷ்புவுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. இப்போது அரசியலில் சற்று ஒதுங்கி மீண்டும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார் குஷ்பு.

kusbhu-yoga-cinemapettai-02

kusbhu-yoga-cinemapettai

முதல் படமே தங்கவேட்டை போல சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம். மீண்டும் தன்னுடைய கேரியர் பிக்கப் ஆனதறிந்து தன்னுடைய உடல் எடையை குறைக்க தினமும் யோகா செய்து வருகிறார்.

அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top