Tamil Cinema News | சினிமா செய்திகள்
போன் பண்ணி படுக்க கூப்பிடுறாங்க.. ஆதாரத்துடன் வெளியிட்டு நொந்துபோன குஷ்பு!
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான நடிகை குஷ்புவுக்கு போன் பண்ணி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
80,90களில் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவை ஆட்டிப் படைத்தவர் நடிகை குஷ்பு. குஷ்பு நடித்தாலே அந்த படம் ஹிட் என்ற அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று இருந்தார்.
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய சீரியலில் அடியெடுத்து வைத்தார். அதுமட்டுமில்லாமல் தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக நடிகை குஷ்புவுக்கு தேவையில்லாத போன் நம்பரில் இருந்து கால் பண்ணி அசிங்க அசிங்கமாக பேசுவதாகவும், பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்களின் நிலைமையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என புலம்பிய குஷ்பு அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போன் நம்பருடன் பதிவிட்டுள்ளார்.
அதிலும் சிலர் நடிகை குஷ்புவை போன் பண்ணி படுக்கைக்கு அழைத்தது போலவும் பேசியுள்ளார். ஆனால் இதையெல்லாம் குஷ்பு பட்டும் படாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் சொல்லியுள்ளார்.

kusbhu-tweet-cinemapettai
இதனால் விரைவில் இது சம்பந்தமாக விசாரணை நடக்க உள்ளது. குஷ்பு தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து அடுத்தடுத்து சினிமாவில் நாயகியாக வலம் வர உள்ளார்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்திலும் நடிக்க உள்ளாராம்.
