Tamil Nadu | தமிழ் நாடு
நெட்டிசன்கள் கேட்ட கேள்வி.. குஷ்பு சொன்ன நச் பதில்
கடந்த 2 நாட்களாக தமிழகம் எங்கும் ரஜினியின் பெயர் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் பெரியாரை பற்றி ரஜினி அவதூறாக அவர் பேசி விட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளதுதான்.
இதற்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள் இடமிருந்து பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. ஆனால் ரஜினிக்கு ஆதரவாக சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக ரஜினி அறிவித்ததில் இருந்து அவருக்கு அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் பெரியாரைப் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென அரசியல் பிரமுகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்களுக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என ஆதாரத்துடன் ரஜினி அறிவித்தார். இதனை ஆதரித்து குஷ்பு தனது டுவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டார்.
ஆனால் சில ரசிகர்களோ ரஜினியுடன் நடிக்க இருப்பதால் அவருக்கு ஆதரவு செய்ய வேண்டாமென பலர் ட்வீட் செய்தனர். இதற்கு பதிலளித்த குஷ்பூ, நான் 90 லையே ரஜினியோடு ஜோடி போட்டவ என அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அண்ணாமலை, மன்னன், பாண்டியன், குசேலன் படங்கள் பார்க்கலையா ? போய் பார்த்துட்டு வாங்க அப்புறம் பேசலாம் என கூறி நோஸ் கட் பண்ணிவிட்டார்.

rajini-kushbu
தற்போது தலைவர் 168 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக குஷ்பு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
