Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் வில்லா என்று பெயரை மாற்றிய ரிசார்ட் நிர்வாகம் – அசத்தல் அப்டேட் !

சன் பிக்சர்ஸ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் படம். சன் பிக்சர்ஸ் இன் அடுத்த பிரம்மாண்ட படைப்பு. அனிருத்தின் இசையில், திருவின் ஒளிப்பதிவில் உருவாக வருகிறது இப்படம்.

sun pictures

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு சமமான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். (அநேகமாக வில்லன் அவதாரம்) ரஜினிக்கு மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளனர். சனத் ரெட்டிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

SUN PICTURES

ரஜினிகாந்த் மீண்டும் கருப்பு தாடி கெட்டப்பிற்கு மாறி உள்ள படம். மேலும் படப்பிடிப்புகள் டார்ஜிலிங் பகுதியில் 37 நாட்கள் நடப்பதாகவும் தகவல்கள் வந்தது.

Rajni

இதுவே மேற்கு வங்காளத்துக்கு முதல் முறையாக சூப்பர் ஸ்டார் சென்றுள்ளாராம். அங்கு அவர் குற்சியங் பகுதியில் பத்து நாட்களாக அள்ளிட்டா ரிசார்ட்டில் தங்கியுள்ளார். இவரின் நினைவாக அந்த ஹோட்டலில் இவர் தங்கிய பகுதிக்கு “ரஜினிகாந்த் வில்லா 03” என் பெயர் மாற்றம் செய்துள்ளார்கள்.

மேலும் அந்த ஹோட்டலில் உள்ள டீ சூப்பர் ஸ்டாருக்கு மிகவும் பிடித்து போனதாம். அடிக்கடி விரும்பி அந்த பகுதியில் அமர்ந்து டீ குடித்தாராம். எனவே அந்த காரிடர் பகுதிக்கு “தலைவா” என்று பெயர் மாற்றியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top