அறிமுக இயக்குனர் நித்திலன் இயக்கி இருக்கும் படம் தான் குரங்கு பொம்மை. இயக்குனர் இமயம் பாரதிராஜா, விதார்த், டெலெனா டேவிஸ், தேனப்பன் , குமரவேல் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

‘என் இனிய தமிழ் மக்களே..’ என்று தன் குரலில் அவர் படத்தை ஆரம்பம் செய்யும் பாரதிராஜாவின் குரலில் ‘புகை பிடிப்பது புற்றுநோயை…’ என்று ஆரம்பம் ஆகிறது படம்.“பணம் பத்தும் செய்யும்” என்ற ஒற்றை வரியை எடுத்துக்கொண்டு ஹாலிவுட்டில் ஹைப்பர்லிங்க் சினிமா என்று சொல்லும் ஸ்டைலில் தன் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். தமிழ் சினிமாவில் இந்த படம் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.குறும்படம் இயக்கி வெள்ளித்திரையில் வெற்றி பெற்ற பாலாஜி மோகன், கார்த்திக்சுப்புராஜ், நலன் குமாரசாமி வரிசையில் புது வரவு தான் இந்த நித்திலன் ஸ்வாமிநாதன். மாநகரம், 8 தோட்டாக்கள் வரிசையில் இந்த ஆண்டின் சிறந்த படத்தில் இதுவும் கட்டாயம் இடம் பெரும்.

 

பட ஷூட்டிங் லொகேஷன் நடிகர்கள் வசனம் என்று அனைத்தையும் மிக அருமையாக தேர்வு செய்ய்துள்ளார் நித்திலன். பாரதிராஜா, விதார்த் மற்றும் குமாரவேலின் மும்முனை நடிப்பில் சில இடங்களில் கண்ணீரும், பல இடங்களில் கை கைத்தட்டல்களாலும் திரை அரங்கமே அதிர்கிறது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: படம் முடிந்ததும் சற்றே கனமான மனதுடன் தான் நாங்கள் வெளிய வந்தோம். அது தான் இயக்குனரின் வெற்றி.

பின் குறிப்பு: தயவு செய்து திரை அரங்கில் மட்டும் படத்தை பார்க்கவும்.