இளம் பிரபல நடிகர் வீட்டிற்கு நேரில் சென்று பத்திரிகை வைத்த குறளரசன்.. எந்த பிரபலத்திற்கு தெரியுமா?

சிம்புவின் தம்பிக்கு இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருக்கு தற்போது எளிய முறையில் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் எளிய முறையில் நடைபெற்றதால் வரவேற்பு நிகழ்ச்சி மிகப்பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக லண்டனில் இருந்து சிம்பு நேற்று சென்னை வந்து குறளரசன் இன் திருமண விழாவில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தன.

தற்போது குறளரசனும் அவரது அப்பாவான டி ராஜேந்திரனும் பிரபலங்கள் பலரை சந்தித்து வரவேற்பு பத்திரிக்கையை கொடுத்து வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து குறளரசன் பத்திரிக்கை வைத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Leave a Comment