ஷங்கரின் கதையையே மாற்றிய தயாரிப்பாளர்.. கோபப்பட்ட ஹீரோவுக்கு அடித்த ஜாக்பாட்

கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் ஜென்டில்மேன். இயக்கிய முதல் திரைப்படத்திலேயே நேர்த்தியான திரைக்கதையும், பரபரப்பான காட்சிகளும் சங்கருக்கு ஏராளமான பாராட்டுகளையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது.

இப்படத்தில் அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரமா, வினித், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்து இருப்பார்கள். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிய இப்படத்தில் அர்ஜுன் அப்பாவியான பிராமணராகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யும் ஆக்சன் கேரக்டரிலும் நடித்து அசத்தியிருப்பார்.

மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இறுதிக்காட்சியில் அர்ஜுன் வில்லனை கொள்வது போன்று தான் முதலில் கதை அமைக்கப்பட்டது. அந்த சமயத்தில் தான் இலங்கையில் மனித வெடிகுண்டு சம்பவம் ஒன்று நடந்தது.

அப்போது அந்த நிகழ்வு பொது மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை பார்த்த குஞ்சுமோன் ஜென்டில்மேன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இந்த காட்சியை வைக்கலாம் என்று சங்கரிடம் கூறியிருக்கிறார். அதன்படி ஷங்கரும் இறுதி காட்சியில் முதலமைச்சரை மனித வெடிகுண்டு வைத்து கொள்வது போன்று கதையை மாற்றி இருக்கிறார்.

ஆனால் இதை கேள்விப்பட்ட அர்ஜுன் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இப்படி ஒரு காட்சியை வைப்பதால் ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும் என்று அவர் கோபமாக ஷங்கரிடம் மறுப்பு தெரிவித்து பேசியிருக்கிறார். ஆனால் அந்தப் படம் செம ஹிட்டானது.

இதனால் என்ன செய்வது என்று தவித்த சங்கர் படாதபாடுபட்டு அர்ஜுனை சமாதானபடுத்தி இருக்கிறார். அதன்பிறகு அர்ஜுனும் சமாதானம் அடைந்து அந்த காட்சியில் நடித்து கொடுத்துள்ளார். அதன் பிறகு படம் ரிலீசாகி சங்கர் மற்றும் அர்ஜுன் இருவருக்கும் ஒரு முக்கிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. இந்த வெற்றிக் கூட்டணி அதை அடுத்து முதல்வன் திரைப்படத்திலும் மீண்டும் ஒரு வெற்றியை கண்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்