fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கும்கி அஷ்வினுக்கு கல்யாணம்.. பொண்ணு யாரு தெரியுமா? புடிச்சா புளியங்கொம்பா பிடிக்கணும்கிறது சரிதான்!

kumki-aswin-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கும்கி அஷ்வினுக்கு கல்யாணம்.. பொண்ணு யாரு தெரியுமா? புடிச்சா புளியங்கொம்பா பிடிக்கணும்கிறது சரிதான்!

சினிமாவைப் பொருத்தவரை சில நடிகர்கள் பெரிய அளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்களின் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் அப்படியே பதிந்துவிடும்.

அப்படி கும்கி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அஸ்வின். இவரின் தந்தை பிரபலமான தயாரிப்பாளரும் கூட.

கும்கி படத்தை தொடர்ந்து ஈட்டி, பாஸ் என்கிற பாஸ்கரன், எத்தன் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். கைவசம் சில படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஸ்வின் கடந்த நான்கு வருடங்களாக வித்யாஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வருவதாக தெரியவந்துள்ளது. அவருடன் வரும் 24ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் டாக்டர் படிப்பில் எம்எஸ் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடக்க உள்ளது.

அனேகமாக திரை நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரிகிறது. ஏற்கனவே சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூட்டத்தை தவிர்க்க முடிவு செய்துள்ளார்களாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top