Tamil Cinema News | சினிமா செய்திகள்
முத்து படம் ஜப்பானியர்களை கவர்ந்த காரணம் இதுதான்.. 25 வருடங்கள் கழித்து ரகசியம் உடைக்கும் கே எஸ் ரவிக்குமார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்(Rajinikanth) மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் முதன் முதலில் உருவான படம்தான் முத்து. கவிதாலயா சார்பில் டைரக்டர் கே பாலச்சந்தர் இந்த படத்தை தயாரித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் முத்து படத்தின் பாடல்கள் வைரல் ஹிட்டானது.
பிஜிஎம் எல்லாம் சும்மா தெறிக்க விட்டிருப்பார். படத்தின் கதையும் வித்தியாசமாக அமைந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் ரஜினியின் ஸ்டைல் படத்தில் செமயாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும். மீனாவின் நடிப்பும் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடிகள் அல்டிமேட்.
இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் தமிழ் மொழிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஜப்பானில் முத்து படம் செய்த சாதனை இன்று உள்ள நடிகர்கள் யாரும் யோசித்து கூட பார்க்க முடியாது.
அந்த ரகசியத்தை பற்றி கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ஜப்பானிய மக்கள் சென்டிமென்ட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் எனவும், ஃப்ளாஷ்பேக்கில் வரும் ரஜினிகாந்த் கதாபாத்திரம் அவர்களை பெரிதும் கவர்ந்ததாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் படத்தின் பில்லராக அமைந்த ரஜினியின் ஸ்டைல் ஜப்பானிய மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், சொந்த நாட்டு நடிகரைப் போல ரஜினியை உணர்ந்ததாகவும் மனதார பாராட்டி உள்ளார்.
25 வருடங்கள் ஆனாலும் இன்றும் முத்து படத்தின் கெத்து குறையாமல் தான் உள்ளது. இன்னும் பல தலைமுறை ரசிகர்கள் வந்தாலும் இந்த படத்தை ரசிக்காமல் இருக்க மாட்டார்கள்.
