சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

ஹீரோயினாக இருந்தவரை கவர்ச்சி நடிகையாக மாறிவிட்ட கேஎஸ் ரவிக்குமார்.. சார், உங்க ரசனையை ரசனை!

கே எஸ் ரவிக்குமார் படங்களில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு சிறப்பாக அமையும். அதிலும் அவர் கமர்சியல் இயக்குனர் என்பதால் கவர்ச்சி ஐட்டங்கள் சில படங்களில் இடம்பெறும்.

பக்கா கமர்சியல் இயக்குனராக வலம் வந்தார் கேஎஸ் ரவிக்குமார். இவரது பல படங்களில் இன்றும் மறக்க முடியாத படமாக இருப்பது சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்த நாட்டாமை திரைப்படம் தான்.

இந்த படத்தின் மூலம் யாருக்கு பெயரும் புகழும் கிடைத்ததோ தெரியாது. ஆனால் இந்தப்படத்தில் டீச்சராக நடித்த நடிகை ராணிக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இப்போதும் இளம் ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது.

ஆனால் இவர் தமிழ் சினிமாவில் கங்கை அமரன் இயக்கிய வில்லுபாட்டுகாரன் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். எப்படியாவது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து விட வேண்டும் என்ற கனவில் நாயகியானார்.

ஆனால் கேஎஸ் ரவிக்குமார் நாட்டாமை டீச்சர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தாராம். அதன்பிறகு அவர் சினிமாவை விட்டு போகும் வரை அவருக்கு தொடர்ந்து கவர்ச்சிப் கதாபாத்திரங்கள் மட்டுமே வந்தது குறிப்பிடத்தக்கது.

actress-rani-cinemapettai
actress-rani-cinemapettai

நடிகை ராணி தற்போது தெலுங்கு சினிமாவின் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அவருக்கு காலேஜ் முடித்த பெண் பிள்ளை ஒருவர் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News