Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

ஏர்போர்ட்டில் சிக்கல்! தடுத்து நிறுத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர். அடக்கடவுளே

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையுடன் நாடு திரும்பியது. ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா ஆகிய இருவருமே கடந்த 5 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர். இருவருமே மிகச்சிறப்பாக ஒவ்வொரு தொடரிலும் செயல்பட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர்.

இருவருள், ஹர்திக் பாண்டியா மட்டும் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றுள்ளார். அவரது அண்ணன் க்ருனால் பாண்டியா இடம் பெறவில்லை.இந்த வருட ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் வின்னிங் ஷாட்டை அடித்தவர் க்ருனால் பாண்டியா தான்.

hardik krunal pandya featured image

இந்த போட்டி முடிந்தவுடன் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர். அதனையொட்டி ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற இந்திய வீரர்கள் நேரடியாக அங்கு சென்றனர்.

மற்ற வீரர்கள் அனைவரும் இந்தியா திரும்பினர்.அவர்கள் மும்பை சத்ரபதி சிவாஜி ஏர்போர்ட் வந்தடைந்தனர். ஏர்போர்ட்டில் ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியாவிடம் விலை உயர்ந்த கை கடிகாரங்கள் மற்றும் அதிக தங்கம் இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

Continue Reading
To Top