Ab De Villiers

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என்று பெயரெடுத்த தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸ், இந்திய வீரர் க்ரூணல் பாண்டியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள தொடர்ந்து திணறி வருகிறார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் கடந்த போட்டிகளை போல் இன்றைய போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பினர்.

அதிகம் படித்தவை:  வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் பொங்கல் வாழ்த்து. சிஎஸ்கே அணிக்கு விளையாட ரெடி ஆகிட்டாரோ ?

பெங்களூர் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி 20 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றிய நிலையில், சற்று நேரம் தாக்குபிடித்து 27 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுத்த டி.வில்லியர்ஸ் க்ரூணல் பாண்டியா பந்தில்
பும்ராஹ்விடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதிகம் படித்தவை:  டோனிக்கு ஏன் அதிக சம்பளம்? நிர்வாக குழு உறுப்பினர் கேள்வி!

இதுவரை டி.வில்லியர்ஸுக்கு எதிராக 4 ஐ.பி.எல் போட்டிகளில்  விளையாடியுள்ள க்ரூணல் பாண்டியா நான்கு முறையும் டி.வில்லியர்ஸின் விக்கெட்டை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ் vs க்ரூணல் பாண்டியா;

Runs: 33
Balls: 32
Dismissals: 4
Average: 8.25
S/R: 103.13