fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ஜோடி இவர் தானாம்! சீதைக்கு செட் ஆவாரா?

adipurush-prabhas

Tamil Cinema News | சினிமா செய்திகள்

500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ஜோடி இவர் தானாம்! சீதைக்கு செட் ஆவாரா?

இந்திய சினிமாவிலேயே தற்போது அதிக பட்ஜெட் படங்களில் சர்வசாதாரணமாக நடித்து வரும் ஹீரோவாக இருக்கிறார் பிரபாஸ்.

வெறும் 250 கோடி பட்ஜெட்டில் உருவான பாகுபலி, பாகுபலி 2 படங்கள் கிட்டத்தட்ட ஆயிரத்து 600 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

அதனை தொடர்ந்து 400 கோடி பட்ஜெட்டில் உருவான சாஹோ படம் 600 கோடி வசூல் செய்தது. ஆக்ஷன் அட்வென்ச்சராக உருவான சாஹோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருந்தாலும் பிரபாசை நம்பி அடுத்ததாக 500 கோடி பட்ஜெட்டில் ஆதிபுருஷ் என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.

ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் ராமனாக பிரபாஸும், ராவணனாக சைப் அலி கானும் நடிக்க உள்ளனர்.

ஆனால் ராமாயணம் முக்கியமாக சீதையை அடிப்படையாகக் கொண்டதல்லவா. இந்நிலையில் சீதை கதாபாத்திரத்திற்கு ஹீரோயின் வேட்டை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

தற்போது சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என்பவர் தேர்வாகியுள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறார்கள்.

kriti-sanon-cinemapettai

kriti-sanon-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top