Politics | அரசியல்
கொடூர ஆணவ கொலை.. கணவன், மனைவி மூன்று மாத கர்ப்பிணி கொலை..
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போன தம்பதிகளை காவிரி ஆற்றின் கரையோரத்தில் எடுக்கப்பட்ட சம்பவம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சாதி ஒழிப்புக்கு எவ்வளவு கட்சிகள் வந்தாலும் அதனை எதிர்த்து சட்டங்கள் போட்டாலும் இந்த மக்கள் திருந்த போவதில்லை.
இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்திருக்கிறதோ இந்த சாதி என்னும் கொடூரமான மிருகம்! மனுசன மதிக்க தெரியாம அப்படி என்ன சாதி? சாதிக்காரனே நீ அந்த குடும்பத்தில் பிறந்து இருந்தால் உனக்கும் அதே நிலைமை தான் என்பதை நினைத்து பாரடா!
ஜாதி வேறுபாட்டினால் தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஓசூரில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவர்கள் வாழ்க்கை பாதையில் முடிவடைந்துவிட்டது. அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு காவிரி ஆற்றில் வீசப்பட்டுள்ளன. இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்களை மீட்டெடுக்கும் போது அந்தப் படத்தை பார்த்து மிகவும் கண்கலங்கி இந்தப் பதிவை எழுதியுள்ளோம்.
இதில் மிகவும் கொடுமையான சம்பவம் என்னவென்றால் அந்தப் பெண் 3 மாத கர்ப்பிணி என்பது கண் கலங்க வைத்துவிட்டது. மனித ஜாதியில் ஆண்சாதி பெண்சாதி இது இரண்டு மட்டுமே உலகின் நீதியாக கொண்டு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.
இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை…வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஸ்_சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!! pic.twitter.com/JmVJgFlIeA
— pa.ranjith (@beemji) November 16, 2018
இந்த ஆணவ கொலைக்கு இந்த சமுதாயத்தில் இருக்கும் அனைவரும்ஒரு காரணமே இனியும் இதுபோன்ற ஆணவக்கொலை நடக்காமல் இருப்பதற்கு நம் சந்ததிகளுக்கு ஜாதி ஒழிப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது நாம் போன்ற ஒவ்வொரு தமிழனின் கடமையாக செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
