கோவிலுக்குள் கழுத்தளவு கிருஷ்ணா நதி வெள்ளம்

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மட்டப்பள்ளியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் கருவரையில் கழுத்தளவு கிருஷ்ணா நதி தண்ணீர் புகுந்துள்ளது.

நலகொண்டா மாவட்டம் மட்டப்பள்ளியில் பழமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. கடந்த சில நாட்களாக தெலுங்கானா,மகாராஷ்டிரா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணா நதியில் ஓடும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்து நதி ஓரத்தில் உள்ள கிராமங்கள், வயல்கள் ஆகியவற்றில் தண்ணீர் புகுந்தது.

அதேபோல் தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மட்டப்பள்ளியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமி கோவில் கருவரையில் கழுத்தளவு கிருஷ்ணா நதி தண்ணீர் திடீர் என்று புகுந்தது.

இதனால் பணியில் இருந்த கோயில் அர்ச்சகர்கள் கோவில் கருவரையை பூட்டிவிட்டு கழுத்தளவு தண்ணீரில் நீந்தி வெளியேறினர்.

Leave a Comment