சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ரசிகர்களே வெறுத்து போகுமளவுக்கு வந்துவிட்டது நிலமை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம், ஆனால் தங்களின் முழு திறனையும் வழங்க வேண்டும். இந்த சீசன் அந்த விஷயத்தில் சி எஸ் கே சொதப்பல் சூப்பர் கிங்ஸ் என பெயர் எடுத்துவிட்டனர்.
10 போட்டிகளில், ஏழில் தோல்வி, 6 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில உள்ளது. இதுவரை அனைத்து சீசன்களிலும் பிளே – ஆப் வரை சென்ற டீம், இம்முறை எந்த வித ஈடுபடும் இல்லாத வீரர்களுடன் ஆடியது போலவே தோன்றியது.
நேற்றயை போட்டிக்கு பின் தோனி, இந்த சீசன் நாங்கள் அந்த அளவுக்கு தகுதியான டீமாக இல்லை. சில இளம் வீரர்களிடம் நாங்கள் அந்தளவுக்கு உத்வேகத்தை பார்க்கவில்லை. அடுத்த போட்டிகளில் அவர்களை ஆட வைப்போம், அவர்களும் அழுத்தம் ஏதும் இன்றி விளையாட முடியும். மேலும் செயல்முறையின் விளைவு தான் முடிவு. நாம் செய்யவேண்டியதை கரெக்ட்டாக செய்யும் பட்சத்தில் வெற்றி, தோல்வி என்ற முடிவினால் அழுத்தம் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வராது. என்றெல்லாம் பேசினார்.
இந்த கருத்தை முற்றிலும் மறுத்துள்ளார் தமிழில் ஐபிஎல் வர்ணனை மேற்கொண்டு வரும் முன்னாள் அதிரடி வீரரும், இந்திய முன்னாள் கேப்டனுமான தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்…

“தோனி எப்பொழுதும் செயல்முறை (புரோசஸ்) என கூறுகிறார், நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. தொடர்ந்து அவர் இந்த வழிமுறை, process என்பதெல்லாம் சும்மா அர்த்தமற்ற பேச்சு. புரோசஸ் புரோசஸ் என்று பேசிக்கொண்டே இருக்கிறார், ஆனால் அணித்தேர்வு என்ற புரோசஸில் கோட்டை விடுகிறார்.

ஜெகதீசனிடம் என்ன உத்வேகம் (ஸ்பார்க்) இல்லை, ஸ்கூட்டர் ஜாதவை தொடர்ந்து அணியில் எடுப்பதன் மூலம் அவரிடம் என்ன ‘ஸ்பார்க்கை’ கண்டார் தோனி. கரண் சர்மா விக்கெட்டுகள் ஆவது எடுத்தார். சாவ்லா அப்படியே போகிற போக்கில் கடமைக்கே என பந்து வீசினார். அதிலும் போட்டி தோல்வி முடிவு உறுதி ஆன பின் வந்து வீசினார். தோனி பிஸ்தாவாக இருக்கலாம், மேலும் அவர் சந்தேகமில்லாமல் சொல்லலாம் சிறந்தவர் என்று, ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.” என சொல்லியுள்ளார்.
மேலும் அவர் முன்பு பேசுகையில் ஜாதாவுக்கு ஸ்கூட்டர் வேண்டும் மைதானத்தில் உள்ள பந்தை விரைந்து சென்று தடுக்க என்றும் கூறினார்.