ஹீரோ கிரிஷ்ணா

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகம் ஆனவர். கடைசியாக பண்டிகை, வீரா போன்ற படத்தில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வந்தவர். அப்பா சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்; அண்ணனோ முன்னணி இயக்குனரான விஷ்ணுவர்தன்.

 சினிமா பின்புலத்தில் இருந்து வந்தாலும், கிருஷ்ணா இன்றும் ஒரு வளர்ந்து வரும் நடிகர் என்று தான் நாம் கருத வேண்டியுள்ளது. அலிபாபா, கழுகு, யாமிருக்க பயமேன் என்று மிக குறைவான ஹிட் படங்கள் தான் கொடுத்துள்ளார். இவர் தற்பொழுது தனுஷின் மாரி 2 வில் நடித்து வருகிறார்.

களரி

கிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ள களரி படத்தின் டீஸர் மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார் .

Kalari FLP

இப்படத்தில் கிரிஷ்ணா மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராக நடித்துள்ளார். அகோரோபோபியா என்ற மனோ வியாதியால் பாதிக்கப்படும் வாலிபராக நடித்துள்ளாராம். கேரளாவில் உள்ள தமிழ் குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனை பற்றியதாம் படத்தின் கதை.

இதோ படத்தின் டீஸர்