Photos | புகைப்படங்கள்
அச்சு அசல் ஆடுகளம், அசுரன் தனுஷ் கெட் அப்பில் KPY தீனா! வைரலாகுது போட்டோஸ்
விஜய் டி.வி-யின் ‘கலக்கபோவது யாரு’ நிகழ்ச்சி வாயிலாக தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் தீனா. செல்லமாக இப்போது KPY தீனா என மாறிவிட்டார். ஸ்கூல் பையன் லுக்கில் இருக்கும் இவருக்கு 30 வயது என சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். சந்தானம், சிவகார்த்திகேயன் போலவே சின்னத்திரை வழியாக வெள்ளி திரைக்கு என்ட்ரி கொடுத்தவர்.
தனுஷ் நடித்து,தயாரித்து வெளிவந்த படம் ‘பவர் பாண்டி’ படத்தில் சிறிய ரோலின் மூலம் அறிமுகமானார். பின்னர் தும்பா படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்தார். கார்த்தியின் கைதி இவருக்கு நல்ல பிரேக் த்ரூ கிடைத்தது. காமாட்சி கேட்டரிங் நல்ல ரீச் ஆனது. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘கட்டப்பாவினே ரித்விக் ரோஷன்’ படத்தை தனுஷ் தயாரிக்க ஹீரோவாக தீனா நடிக்கவுள்ளார் என முன்பே சொல்லப்பட்டது.அஜித் From அருப்புக்கோட்டை என பெயர் வைக்கப்பட்ட இப்படம் இன்னமும் டேக் ஆப் ஆகவில்லை.
இந்நிலையில் தனுஷின் ஹிட் ரோல்களான ஆடுகளம் கருப்பு, அசுரன் சிவசாமி போல கெட் அப் மாற்றி போட்டோ எடுத்துள்ளார் தீனா.

kpy deena aadukalam
வேஷம் கட்டாமலே சிறு வயது தனுஷ் போல தான் இருப்பார். இந்த போடோஸில் மனிதர் தனுஷை உரித்து வைத்துள்ளார் என்பதே நிஜம்.

kpy deena asuran
நேற்றில் இருந்து இந்த போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.
