Connect with us
Cinemapettai

Cinemapettai

vanitha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீங்க சொல்றத கேக்குறதுக்கு நா உங்க மூணாவது புருஷன் இல்ல.. வனிதாவை வச்சு செஞ்ச பிரபலத்தின் வீடியோ

சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஹாட் டாபிக் ஆக இருப்பவர் வனிதா. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த டாபிக் தான் வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம். நடிகை வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்ததே.

என்னதான் அப்பப்போ மத்தவங்களோட பேச்சு அடிபட்டாலும் கான்ஸ்டன்ட்டா இருக்க பேச்சு நம வனிதாவோடது தான். அந்த அளவுக்கு சமூக ஊடகங்களுக்கும் நம்ம வனிதாவுக்கும் ஒரு பிணைப்பு இருக்கிறது.

தொடர்ந்து வனிதா அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கினாலும் அவரை விஜய் டிவி ஆதரித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ‘நம்மவர் கமல்’ என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதாவை KPY பாலா பங்கமாக கலாய்த்து இருப்பது அந்த அரங்கே அலறும் அளவிற்கு மற்றவர்களை சிரிக்க வைத்ததாம்.

‘நம்மவர் கமல்’ நிகழ்ச்சியில் KPY பாலா வனிதாவிடம்” இளைஞர்களுக்கு ஏதாவது ஒரு மெசேஜ் கொடுங்க மேடம் “என்று கேட்டபோது வனிதா “Don’t Give Up for Anything!” என்று மெசேஜ் கொடுத்தார். இதற்கு பாலா,” நீங்க சொல்றதெல்லாம் கேக்குறதுக்கு நாங்க ஒன்னும் உங்க புருஷன் பீட்டர் பால் கிடையாது. நீங்க படிச்ச ஸ்கூல்ல நான் பிரின்ஸ்பல்” என்று கூறி கலாய்த்து உள்ளார்.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியின் போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ப்ரியங்கா வனிதாவிடம் பம்மி பம்மி நடந்தாராம். அவ்வளவு பெரிய உருவமே பம்மி பம்மி சரண்டரானபோ இந்த குச்சி எதுக்கு சவுண்ட் போட்டிருக்கு என்று சமூக ஊடகத்தினர் KPY பாலாவை கிண்டலடித்து வருகின்றனர்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்னர் அவரது திருமண பிரச்சனை சமூக ஊடகங்களில் ஓய்ந்த நிலையில் தற்போது வனிதாவை வச்சு செஞ்ச இந்த நிகழ்ச்சியை சமூக ஊடகத்தினர் பேசுபொருளாக மாற்றியுள்ளனர்.

வீடியோ பார்க்க இந்த லிங்க்யை கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top