டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க பேரவை தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் அன்று முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என காய் கனி மற்றும் பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுசம்பந்தமாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜூவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விவசாயிகளுக்கு ஆதரவாக 25ம் தேதி தமிழகம் முழுவதும் லாரிகள் இயங்காது!

மேலும், மாநிலம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஓட்டல்களும் மூடப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு கோவையில் இன்று அறிவித்துள்ளார். அன்றே முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.