India | இந்தியா
கோயிலில் அர்ச்சனைத் தட்டில் போடும் காசுகள் பூசாரிகளுக்கு கிடையாது.! அப்ப அந்தப் பணம் யாருக்கு போகும்
பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகள் அனைத்தும் ஐயர்களுக்கு கிடையாது அது கோயில் நிர்வாகத்திடம் சேரும் என தெரிவித்துள்ளனர். எந்த மாநிலத்தில் இந்தக் கொள்கையை நிறைவேற்றப்பட்டுள்ளது. விபரம் கீழே
கர்நாடக மாநிலத்தில் அம்மாநில அரசு கோவில்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்ன உத்தரவு என்றால் பக்தர்கள் கொடுக்கும் பணம் அனைத்தும் கோயில் நிர்வாகத்திடம் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர். அதாவது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 30 ஆயிரம் கோயில்கள் உள்ளன.
அக்கோயிலில் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை எடுத்து அம்மாநில அரசு 6வது ஊதிய உயர்வு கொள்கையின் அடிப்படையில் ஊதியத்தை உயர்த்தி உள்ளது என தெரிவித்துள்ளனர். அதனால் பக்தர்கள் தட்டில் போடும் காசுகள் அனைத்தும் இனிமேல் ஐயர்களுக்கு கிடையாது.
அந்த காசுகள் கோயில் நிர்வாகத்துடன் சேர்க்கப்படும் எனவும் பக்தர்கள் கொடுக்கும் பணத்தை கோயில் உண்டியலில் செலுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
