fbpx
Connect with us

Cinemapettai

ஒரு தலை காதல் விபரீதம்.. கோவையில் தீக்குளித்த மாணவி

Tamil Nadu | தமிழ் நாடு

ஒரு தலை காதல் விபரீதம்.. கோவையில் தீக்குளித்த மாணவி

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வரும் மாணவி சினேகா வயது 19. நேற்று அதிகாலை ஒருதலை பட்ச காதல் தோல்வியால் தன்னுடைய உடம்பில் தானே பெற்றோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அருகே உள்ள பொதுமக்கள் மாணவியை காப்பாற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சினேகா அதிக விழுக்காடு உடன் தீப்புண் பரவியுள்ளதால் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி சினேகா கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக காவல்துறை கூறி வருகின்றனர்.

இது குறித்து பீளமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top