Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் மரணமடைந்தார்.! அதிர்ச்சியில் திரையுலகினர்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துவந்த கோவை செந்தில் மரணமடைந்தார்.
இவருக்கு தற்பொழுது வயது 74 ஆகும் இவர் தமிழில் கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த இது நம்ம ஆளு, ஒரு கை ஓசை, ஆராரோ ஆரிராரோ, என் ரத்தத்தின் ரத்தமே, பவுனு பவுனுதான் அவசர போலீஸ் 100, படையப்பா கோவா என பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் குணசித்திர வேடத்திலும் நடித்தவர்.
இவர் இன்று காலை கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் இவரின் உடல் கோவையில் இன்று நல்லடக்கம் செய்யபட்டது, இயக்குனர் பாக்கியராஜின் ஆஸ்தான நடிகர் தான் கோவை செந்தில் இதை பல முறை மேடையில் பாக்கியராஜ் கூறியுள்ளார்.
இவரது மரணம் திரைத்துறையினரையும் அவரது உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இவரும் பாக்கியராஜியும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் பாக்கியராஜ் பெரும்பாலான படங்களில் இவருக்கு சிறு சிறு வேடம் கொடுத்து உதவி வந்தார்.
நடிகர் கோவை செந்தில் மரணத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
