fbpx
Connect with us

Cinemapettai

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை… ட்விட்டரில் கொதித்தெழுந்த பிரபலங்கள்!

pollachi-issue-admk

News | செய்திகள்

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை… ட்விட்டரில் கொதித்தெழுந்த பிரபலங்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களே கொடுமைப்படுத்தியும், மிரட்டியும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட நிகழ்வு அனைவரையும் பதறச் வைத்துள்ளது.

இது தற்போது இந்திய அளவில் அனைத்து மக்களும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற கொடூர சம்பவங்களால் பல பெண்கள் வாழ்க்கை அழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுகவைச் சேர்ந்த நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம்..

தற்போது வெளியாகியுள்ள ஒரு சில வீடியோக்களில் பெண்களை மிகக் கொடூரமாக தாக்கும் காட்சி கண் கலங்க வைக்கிறது. அதில் ஒரு பெண் ‘அண்ணா என்ன அடிக்காதீங்க அண்ணா’ என்று கதறும் காட்சி பெற்றோர்களை பதற வைத்துள்ளது.

இந்த கொடுமையான சம்பவத்தை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல சமூக வல்லுநர்கள் கூறி வருகின்றனர். இவர் சம்பந்தப்பட்ட அனைவரையும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இதில் 200 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு 20 பேர் காரணமாக இருக்கலாம் என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனைப் பற்றி சினிமா பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top