fbpx
Connect with us

Cinemapettai

ஏய்.! செம்ம அழகா இருக்க நீ.!! குடிபோதையில் பெண்ணை வர்ணித்த காவலர்.. காமத்தின் உச்சம்

Tamil Nadu | தமிழ் நாடு

ஏய்.! செம்ம அழகா இருக்க நீ.!! குடிபோதையில் பெண்ணை வர்ணித்த காவலர்.. காமத்தின் உச்சம்

கோவையில் குடிபோதையில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசி வற்புறுத்திய காவலரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த காவலர் இன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சரண்யா (35). இவர் கீரணத்தத்தில் உள்ள தனது தாயாரை பார்க்க இரு சக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை தாண்டி சென்றபோது, போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இதனைக் கண்டு பயந்து போன சரண்யா வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். காவலரும் அவரை வேகமாக பின்தொடர்ந்து சரண்யாவிற்கு முன்னே வந்து மறித்து நின்றார். பின் சரண்யாவிடம் அந்த காவலர்,”ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு”என்றும், போக போக இன்னும் ஆபாசமாகவும் அவரை வர்ணித்துள்ளார்.

இதனால் பதற்றம் நிறைந்த சரண் அருகிலுள்ள கடைக்குள் சென்று தஞ்சம் அடைந்தார். பின் தன் கணவருக்கு கால் செய்து நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதனைத்தொடர்ந்து சரண்யாவின் கணவரும் மற்றும் அவரது நண்பர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனே விரைந்தனர். அவர்களுக்கும் காவல் இருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினரும் அந்த பகுதியில் சூழவே காவலர்  பதட்டம் அடைந்தார்.

அவரின் காவலர் உடை அவரின் உயிரை காப்பாற்றியது என்றே சொல்லலாம். அவர் காவலர் உடை அணிந்து இருந்ததால் மக்கள் அவரை அடிக்காமல் நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனைக் கேட்டறிந்த காவல்துறை கண்காணிப்பாளர், உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்தார்.

வரவர யார் நல்லவன்? யார் கெட்டவன்? ன்னு தெரியாம போச்சு..!

police-1

police-1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top