vijaysethupathi

அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த் இவுங்கல்லாம் நடிக்கிற படம்தாங்க நம்ம கூட்டத்தில் ஒருத்தன்.

இந்த படத்தோட கதை என்னானா மேலையும் இல்லாமல் கீழையும் இல்லாமல் நடுவுல இருக்க கூடிய சாமானிய மனிதன் தன்னோட வாழ்க்கைல என்னென்னபிரச்சனைகளை சந்திக்கிறான்ங்கிறதுதாங்க.

இந்த படக்குழு கொஞ்சம் வித்தியாசமான முறையில இந்த படத்தை Promotion செஞ்சுட்டு இருக்காங்க… அப்படி என்ன பண்றாங்கன்னு பார்த்திங்கன்னா சாதாரணமா கூட்டதோட கூட்டமா இருந்து பின்னாடி பெரிய ஆளாக மாறுன சில பேரை கௌரவப்படுத்துற மாதிரி இணையத்துல வீடியோக்களை வெளியிட்டுட்டு வர்றாங்க.

அப்படி இந்த குழு அப்துல் கலாம், அறிஞர் அண்ணா, தோனி போன்ற பெரிய ஆளுங்களை கௌரவப்படுதிருக்காங்க, இப்போ இந்த வரிசைல நம்ம விஜய் சேதுபதியை பாராட்டி ஒரு வீடியோ வெளியிற்றுக்காங்க அந்த வீடியோவை இதோ நீங்களே பாருங்க.