ஆண்ட்ராய்டு குஞ்சப்பனை மிஞ்சியதா கூகுள் குட்டப்பா.? அனல் பறக்க வெளிவந்த விமர்சனம்

நம் தமிழ் சினிமாவில் அறிவியல் பூர்வமான கதைகள் வெளி வருவது மிகவும் அரிது. அப்படி வெளிவரும் சில படங்கள் ரசிகர்களை கவர்ந்தாலும் பெரும்பான்மையான திரைப்படங்கள் அதை செய்வதில் சொதப்பி விடுகிறது.

அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் படம்தான் கூகுள் குட்டப்பா. கேஎஸ் ரவிக்குமார் மற்றும் விஜயகுமாரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை சபரி சரவணன் இயக்கியிருக்கிறார். இப்படம் மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து வசூல் சாதனை படைத்தது.

அந்த படத்தை இயக்குனர் தமிழில் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்ளிட்ட பலரை வைத்து இயக்கியிருக்கிறார். பொதுவாகவே சையின்ஸ் சம்பந்தப்பட்ட திரைப்படம் என்றால் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். இந்தப் படம் அப்படி எந்த வித பிரம்மாண்டமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.

இதில் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் தர்ஷன் இருவரும் அப்பா, மகன் கேரக்டரில் நடித்து இருக்கின்றனர். வெளிநாட்டு வேலைக்காக தந்தையை பிரிந்து செல்லும் தர்ஷன், அவருக்கு துணையாக ஒரு ரோபோவை அனுப்பி வைக்கிறார். ஆரம்பத்தில் அதை பிடிக்காத கேஎஸ் ரவிக்குமார் போகப் போக அதை தன் மகனாகவே பாவித்து வருகிறார்.

சில காலங்களுக்குப் பிறகு அந்த ரோபோவை திரும்ப வாங்க வரும் தர்ஷினிடம் கேஎஸ் ரவிக்குமார் அதை கொடுக்க மறுக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த கூகுள் குட்டப்பாவின் கதை. இப்படம் மலையாள திரைப்படம் அளவுக்கு இல்லை என்றாலும் கே எஸ் ரவிக்குமாரின் நடிப்பு சற்று ஆறுதலாக இருக்கிறது.

மேலும் யோகிபாபுவின் காமெடிகளும் ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது அதைத்தவிர பாடல் காட்சிகள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. தர்ஷன் நடிக்க முயற்சி செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவருடன் ஒப்பிட்டு பார்க்கும் போது லாஸ்லியாவுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை. சொல்லப்போனால் அவர் நடிப்பில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வழக்கமான ஹீரோயின்களைப் போல இந்த படத்தில் அவருக்கு பெரிதாக காட்சிகள் எதுவும் சொல்லும்படி அமையவில்லை.

அதனால் இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் படம் அறுவையாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாளத் திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் அளவிற்கு செய்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக் ரசிகர்களை கவர தவறிவிட்டது.

Next Story

- Advertisement -