இசையமைப்பாளர் சாம் சி. எஸ்

சாம் சில வருடங்களாகவே தனக்கென்று ஒரு அங்கீகாரம் பெற வேண்டும் என்று கடுமையாக உழைத்தவர். இவர் தான் அம்புலி, கள்ளப்படம், ஆ போன்ற படங்களுக்கும் இசை அமைத்தவர். எனினும் விக்ரம் வேதாவின் பின்னணி இசை, யாஞ்சி பாடல், விஜய் சேதுபதிக்கு இவர் கொடுத்த தீம் மியூசிக் என்று இந்த ஒரு படத்தில் உச்ச தொட்டுவிட்டார். மேலும் புரியாத புதிர் படத்திலும் நன்றாக இருந்தது இவர் இசை. அனிருத், சந்தோஷ் நாராயணன் வரிசையில் இடம் பிடித்து விட்டார்.

ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு

தெறி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் அட்லி – விஜய் கூட்டணியில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் ‘மெர்சல்’.இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜி கே விஷ்ணு. இதுவே இவரின் முதல் படம். ஒரு அறிமுக ஒளிப்பதிவாளர் பணியாற்றிய படம் என்பதே யாராவது கூறினால் மட்டுமே தெரியுமளவிற்கு ஒரு கைதேர்ந்தவர் போல் சிறப்பாக பணியாற்றி இருந்தார்.

அதிகம் படித்தவை:  விபத்து நடந்த பின் தெறித்து ஓடும் துருவ் விக்ரமின் நண்பன் வீடியோ ! விக்ரம் தரப்பின் அதிகாரப்பூர்வ விளக்கம் உள்ளே !

இயக்குனர் கோபி நைனார்

மீஞ்சூர் கோபி என்று நம்மால் அறியப்பட்டவர். இவர் சர்ச்சைகள் சொந்தக்காரர். ரஞ்சித்தின் மெட்ராஸ் கதை, முருகதாஸின் கத்தி இவை இரண்டும் தன்னுடைய கதை என்று போராடியவர். வெறும் வாய் சவடால் விடுபவரா என்று பலரும் நினைத்த வேலையில் அறம் படம் வாயிலாக தன் திறன் எது என்று புரியவைத்து விட்டார். துளியும் கமேற்சியல் விஷயம் சேர்க்காமல் இவர் எடுத்த அறம் உலக தரம்.

நடிகை அதிதி பாலன்

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து வரும் நயன்தாராவே நடிக்க மறுத்த படம் அருவி. சமந்தா, ஸ்ருதி ஹாஸன் போன்ற நட்சத்திர ஹீரோயின்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய படம் அருவி. இயக்குனரை பற்றி கூட சில எதிர் மறை விமர்சனம் வந்தது. அனைவரின் ஒட்டு மொத்த பாராட்டையும் இந்த ஆண்டு தட்டி சென்றவர் இவர் தான்.

அதிகம் படித்தவை:  சீமராஜா சிவகார்த்திகேயனை மட்டம் தட்டிய ட்வீட் ! பதிவிட்டது அருண் விஜயா அல்லது ஹாக்கரா ? நீங்களே கண்டுபிடிங்க !

தயாரிப்பாளர் எஸ். ஆர் . பிரபு

தன் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் மூலம் மாநகரம். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் சார்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அருவி. இந்த முன்று படமும் இவர் ரசனை என்ன என்பதற்கு உதாரணம். இவர் பாணர் படம் என்றால் நம்பி திரையரங்கு செல்லலாம் என்ற நம்பிக்கையை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டு வந்துவிட்டார் என்றால் அது மிகை ஆகாது.

இயக்குனர்களின் ஆண்டு

இவர்கள் அனைவரும் கோலிவுட்டில் இந்த வருடம் முத்திரை பதித்த பலரில் ஒரு சிறு துளி தான். மீசையை முறுக்கு வாயிலாக ஆதி, மாநகரம் லோகேஷ் கனகராஜ், 8 தோட்டாக்கள் ஸ்ரீ கணேஷ். ஒரு கிடாயின் மனு சுரேஷ் சங்கையா, குரங்கு பொம்மை நித்திலன், அருவி அருண் பிரபு, விக்ரம் வேதா புஷ்கர்- காயத்ரி என்று இயக்குனர்கள் தான் இந்த வருட கோலிவுட்டில் ட்ரெண்டிங் ஆசாமிகள். 2017ஐ இயக்குனர்களின் ஆண்டு என்று சொல்வது தான் சரி !