புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நயன்தாரா இல்ல, அஜித்தும் இல்ல.. கோலிவுட் பணக்கார ஜோடி யார் தெரியுமா?

சினிமா வட்டாரத்தில் ஏகப்பட்ட காதல் ஜோடிகள் உள்ளது. ஒரு சிலர் நீண்டகாலம் ஒன்றாக வாழ்ந்த பின் விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். இன்னும் ஒரு சிலர் வெளி உலகத்துக்காக ஒன்றாக வாழ்ந்து வருகிறது. இப்படி இருக்க, இன்னும் ஒரு சிலர் மட்டும் தான், கடைசி வரை விருப்பத்தோடும் காதலோடும் ஒன்றாக வாழ்ந்து, மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.

தமிழை பொறுத்த வரை, அப்படி பட்ட ஒரு ஜோடி தான் அஜித் ஷாலினி, மற்றும் சூர்யா ஜோதிகா. நயன்தாரா விக்னேஷ் சிவன் காதல் நிறைய பேர் பார்த்து வியந்தாலும், எவெர்க்ரீன் ஜோடிகளாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் என்றால், அது சூர்யா ஜோதிகா மற்றும் அஜித் ஷாலினி தான்.

அடேங்கப்பா இவ்வளவு கோடி சொத்தா?

தமிழை பொறுத்தவரை பணக்கார ஜோடி என்று சொன்னவுடன் நமக்கு நயன்தாரா விக்னேஷ் சிவன் தான் ஞாபகத்துக்கு வருவார்கள். திரை துறை மட்டுமின்றி, பிசினஸில் கலக்கி வருகின்றனர். ஆனால் இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்க்கு, அஜித் ஷாலினியிடம் சொத்து உள்ளது.

ஆனால் இவர்கள் தான் கோலிவுட் பணக்கார ஜோடிகளா? என்று கேட்டால், அது தான் இல்லை. இவர்களை விட அதிக சொத்து மதிப்பு உள்ள ஜோடி, சூர்யா ஜோதிகா தான். சூர்யாவும் ஜோதிகாவும் முதன்முதலில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இதில், அவர்கள் இருவரும் தங்கள் காதல் வெற்றி பெற வேண்டும் என இடம் மாறி பணியாற்றுவது உள்ளிட்ட விஷயங்கள் செய்வதுபோல் பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த நிலையில், ‘காக்க காக்க’ படத்தில் ஜோடியாக நடித்தபோது இவர்களுக்கு காதல் மலர்ந்து. அதன் பிறகு இருவரும் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் சிவகுமார் திருமணத்துக்கு ஒத்துக்கவே இல்லை.. நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு, 2006 ஆம் ஆண்டு குடும்ப சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இவர்கள் தான் கோலிவுட் பணக்கார காதல் ஜோடி.. இவர்களின் சொத்துமதிப்பு மொத்தம் ரூ. 537 கோடி. இதில், சூர்யாவின் சொத்து மதிப்பு ரூ. 206 கோடி என்றும் ஜோதிகாவின் சொத்து மதிப்பு ரூ. 331 கோடி என்றும் கூறப்படுகிறது. இதை கேட்ட நெட்டிசன்கள் அடேங்கப்பா இவ்வளவு கோடியா என்று வாயை பிளக்கிறார்கள்..

- Advertisement -

Trending News