Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோலிவுட்டின் அடுத்த வார ரிலீஸ்… வெற்றி மகுடத்தை தட்டி செல்ல போவது யார்?
கோலிவுட்டில் ஒவ்வொரு படத்தின் வெளியீடும், வெளியீடு ஒழுங்கு முறை சிறப்புக்குழுவின் அனுமதியை பெற்ற பிறகு தான் என்ற புதிய விதிமுறையை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புது படங்களின் வெளியீடுகள் நிறுத்தப்பட்டது. படப்பிடிப்புகள் முதல் திரைப்பட நிகழ்ச்சிகள் வரை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, 45 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் சமீபத்தில் தான் வாபஸ் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து, தேங்கி இருக்கும் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய வெளியீடு ஒழுங்கு முறை சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. முறையாக அவர்களின் அனுமதியுடன் படத்தை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டம் முடிந்ததும், முதல் படமாக மெர்குரி ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டாவது வாரமான நேற்று, சாய் பல்லவியின் முதல் கோலிவுட் படமான தியா, விக்ரம் பிரபுவின் பக்கா படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து, வரும் வாரமான மே 4ற்கும், 11ந் தேதிக்கும் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் படங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதன் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
மூன்றாவது வாரமான, மே 4ந் தேதி சச்சின் மணி நாயகனாக நடிக்கும் ’காத்திருப்போர் பட்டியல்’ படம். நந்திதா நாயகியாக நடிக்கும் இப்படம் மின்சார ரெயிலில் பயணம் செய்பவர்களின் வாழ்க்கையை காமெடி கலந்து சொல்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகும் ’அலைப்பேசி’. சந்தோஷ் ஜெய்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. கௌதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா ஆகியோர் நடிக்கும் இப்படம் அடல்ட் காமெடி படமாக உருவாகி இருக்கிறது. இந்த வார வெளியீட்டில் மற்ற இருபடங்களும் புதுமுகம் என்பதால் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வார இறுதி வசூலை தட்டி செல்லும்.
அடுத்த மே 11ந் தேதி ரிலீஸ் பட்டியல் தான் செம போட்டியை தக்க வைத்து இருக்கிறது. சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகி இருக்கும் நடிகையர் திலகம். சாவித்ரியை உரித்து வைத்தாற் போன்று அச்சுஅசலாக இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கே இப்படத்திற்கு ஒரு கூட்டம் ஆவலாக காத்திருக்கிறது. அடுத்து, விஷால், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் இரும்புத்திரை. மித்ரன் இயக்கத்தில் டெக்னாலஜி நிறைந்த உருவாகி இருக்கும் படம். பொங்கல் தினத்திலே இப்படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாலும், முன்னதாக விஷாலின் துப்பறிவாளன் படம் ஹிட் என்பதாலும் இப்படத்திற்கும் செம கிரேஸ் இருக்கிறது. அருள்நிதி நடிப்பில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம். மு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மகிமா நம்பியாக நாயகியாகி இருக்கிறார். படத்திற்கும் பாசிடிவ் விமர்சனங்களே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு மொழி வெற்றி படங்களை தமிழில் இயக்குவது சமீபத்தில் ட்ரெண்டாகி இருக்கிறது. மம்முட்டி, நயந்தாரா நடிப்பில் மலையாளத்தில் மாஸ் ஹிட் அடுத்த படத்தின் தமிழ் அதிகாரப்பூர்வ ரீமேக் பாஸ்கர் ஒரு ராஸ்கல். மலையாள இயக்குனர் சித்திக்கே இயக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் ஜோடி சேர்ந்து இருக்கின்றனர். இந்த வாரத்தில் வெளியாகும் எல்லா படங்களுக்குமே ஒருசாராரிடம் எதிர்பார்ப்பு நிலவுவதால் படத்தின் திரைக்கதை சிறப்பாக இருக்கும் படம் வெற்றியை தட்டும் என எதிர்பார்க்கலாம்.
