தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுக்கு எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் வராத மாஸ், போலீஸாக நடித்தால் வந்து விடும். படமே சூப்பர் ஹிட் அடிக்கும். இதில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை போலீஸாக கோலிவுட்டில் கலக்கிய டாப் நாயகர்கள், அவர்களின் படங்களை தெரிந்து தான் கொள்ளுங்களேன்.

இந்த போலீஸ் கெட்டப்பில் முதலில் ஹிட் அடித்தவர் சிவாஜி கணேசன் தான். அவரின் திரை வாழ்வில் சிறந்த படமான தங்கப் பதக்கம் படத்தில் மிடுக்கான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். யாராக இருந்தாலும் சரி கடமை தான் முக்கியம் என செயல்படும் அதிகாரியாக இவரின் நடிப்பு இப்போது வரை ஹிட் பட வரிசையில் இருக்கிறது.

கோலிவுட்டின் தலைவர் எம்.ஜி.ஆரின் போலீஸ் படம் ரகசிய போலீஸ் 115. ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்டி படங்கள் ஹிட் அடித்த நேரத்தில் வெளியாகிய இப்படம் அதே கதை பின்னணியில் அமைந்திருந்தது. படமும் சூப்பர் வெற்றியை பெற்றதால், 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது.

ரஜினியின் திரை வாழ்வில் முக்கியமான படம் மூன்று முகம். இப்படத்தில் திமிரான காவல்துறை அதிகாரி அலெக்ஸ் பாண்டியனாக நடித்திருந்தார். இரு மகன்களாக என மூன்று கெட்டப்பில் ரஜினிகாந்தே நடித்திருந்தார். அலெக்ஸ் பாண்டியன் டி.எஸ்.பி கதாபாத்திரம் கோலிவுட்டில் இன்னும் மிரட்டல் நாயகனாகவே இருந்து வருகிறது. இப்படம் 250 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.

என் கண்ணு கேட்டியாமே என கம்பீர குரலில் கண்ணு உருட்டி காட்டும் கமல்ஹாசனை இன்று வரை பலராலும் மறக்கவே முடியாது. அதிகமான போலீஸ் வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தாலும், வேட்டையாடு விளையாடு படம் தான் அவரின் கம்பீரத்தை தூக்கி நிறுத்தியது. சாதாரண கதையாக அமைக்கப்படாமல் வித்தியாசமான கதை பின்னணியில் உருவாக்கி இருந்தார் இயக்குனர் கௌதம் மேனன்.

விஜயகாந்த் – கேப்டன் பிரபாகரன்
விஜயகாந்த் இன்று கேப்டனாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறார் என்றால் அது கேப்டன் பிரபாகரன் படத்தால் தான். விஜயகாந்தின் 100வது படமான இப்படம் அதிக நாள் ஓடியது. தமிழகத்தையே உலுக்கிய சந்தனக்கடத்தல் வீரப்பனின் கதையையும், அவரை பிடிக்க போராடும் காவல் அதிகாரி வாழ்வையும் மையமாக உருவாகப்பட்டு இருந்த படம். சாதாரணமாகவே மாஸ் காட்டும் விஜயகாந்திற்கு இப்படம் தான் தொடக்கப்புள்ளி.

விஜயின் திரை வாழ்வில் வெவ்வேறு விதமான கதாபாத்திரங்கள் நடித்தாலும் போலீஸ் அதிகாரியாக தெறி படத்தில் நடித்தது அனைவரிடமும் வரவேற்பை பெற்றது. விஜயகுமார் ஐபிஎஸ்ஸாக நடித்திருந்த விஜய் ஒவ்வொரு காட்சியில் அப்ளாஸ் வாங்கியதை எந்த விஜய் ஆர்மியும் இன்று வரை மறந்து இருக்காது. ரவுடிகளை அடித்து துரத்துவதாக இருக்கட்டும், வில்லனிடம் உன் மகனை நான் தான் கொன்றேன் என கூறுவதை வரை தன் ஸ்டைலில் பட்டையை கிளப்பி இருந்தார்.

எப்போதுமே மாஸ் காட்டும் அஜித்திற்கு மேலும் சூப்பர் ஸ்மார்ட்டாக அமைந்தது என்னை அறிந்தால் படம். கமலுக்கு வேட்டையாடு விளையாடு கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனனே இப்படத்தையும் இயக்கி இருந்தார். ஒற்றை மனிதனாக வில்லன்களை பந்தாடுவதாக இருக்கட்டும். தன் காதலியின் மகளை பொத்து வளர்ப்பதாக இருக்கட்டும். தூள் கிளப்பிய அஜித்திற்கு வாவ் சொல்லாத ஆளே இல்லை.

விக்ரமின் திரை வாழ்வில் அதிக லைக்ஸை குவித்த படங்களில் முதல் இடம் இன்று வரை சாமி படத்திற்கு தான். இட்லியை பீரில் போட்டு சாப்பிடுவதாக இருக்கட்டும். நான் போலீஸ் இல்ல பொறுக்கி என வசனம் பேசுவதாக இருக்கட்டும். அடாவடி போலீஸாக விக்ரம் புது ஸ்டைலை படைத்தார். படம் முழுவதும் இவர் நல்லவரா? கெட்டவரா? என யோசிக்க வைத்து ரசிகர்களை குழப்பினார் விக்ரம். இது அவரின் சினிமா பட்டியலில் ட்ரேட் மார்க் முத்திரையை படைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

singam3 movie review
singam3 movie

சூர்யாவிற்கு ஒரு தனி அடையாளத்தை படைத்த படம் காக்க காக்க. மிரட்டல், அடாவடி இல்லாமல் அசல் போலீஸாக நடித்திருந்தார். ஜோதிகா அவருக்கு இப்படத்தில் நாயகியாக கூட்டணி அமைத்து இருந்தார். இந்த ரோலுக்காக அப்போது இருந்த சென்னையின் அசிஸ்டன்ட் கமிஷனர் விஜயகுமாரை ரோல் மாடலாக வைத்து நடித்திருந்தார். தொடக்கமாக இப்படம் அமைந்தாலும், சூர்யாவின் திரை வாழ்வில் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்த சிங்கம் படம் தான் பெரும் வெற்றியை பெற்றது.