‘சிங்கம்-3’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்திருப்பவர் அனூப் தாகூர் சிங். மும்பையைச் சேர்ந்த இவர், பல்வேறு ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். அத்துடன், உலக அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ‘சிங்கம்-3’ தான் அவர் நடித்த முதல் படம். அதற்குப் பிறகு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார் அனூப்.
ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தயாராகும் ‘உதகர்சனா’ படத்தில், அனூப் தாகூர் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் தன்ஷிகா. சுனில் குமார் இயக்கும் இந்தப் படம், சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. இதன்மூலம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அறிமுகமாகிறார் சாய் தன்ஷிகா.
அதிகம் படித்தவை:  இதற்க்கு மட்டும் 65 லட்சம் கேட்கும் பிரபல நடிகை!, தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!!!.