தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். இவை எந்த அளவிற்கு இருக்கும் என்றால் அவர்களுக்காக இவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.

இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு சிலர் அவர்களாகவே மாறிவிடுவார்கள், இதை வெளிச்சத்திற்கு கொண்டு வர விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசினார்கள்.

இதில் பேசிய பலரும் எங்களால் அந்த நடிகரின் பாதிப்பிலிருந்து வெளியே வரவே முடியவில்லை, எங்களுக்கு அவமானமாக தான் இருக்கிறது என வருத்தத்துடன் கூறினர். நடிகர்களை ரசிக்கலாம் வாழ்க்கையாகவே நினைத்தால் இப்படித்தான் அழ வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.