Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil actress

Entertainment | பொழுதுபோக்கு

கோலிவுட்டில் படையெடுக்கும் நாயகி முக்கியத்துவம் உள்ள படங்கள்.. யாருக்கு வெற்றி மகுடம்?

நயந்தாரா, அனுஷ்கா போன்ற முக்கிய நடிகைகள் மட்டும் செய்து வந்த நாயகி முக்கியத்துவம் உள்ள கதைகளை தற்போது எல்லா நடிகைகளும் கையில் எடுத்து இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக இந்த வருடத்தில் பல நாயகி முக்கியத்துவம் உள்ள படங்கள் தயாராகி வருகிறது. இதன் பார்வை உங்களுக்காக,

கோலமாவு கோகிலா: நடிகைகளில் புது அடையாளத்தை உருவாக்கியவர் நயந்தாரா. இவர் தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இதில், பரபரப்பாக தயாராகி வரும் கோலமாவு கோகிலா படமும் ஒன்று. விஜய் டிவி ரியாலிட்டி ஷோ இயக்குனரான நெல்சனின் வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் நயன் கிராமத்துப் பெண் வேடத்தை ஏற்று இருக்கிறார். எப்போதுமே, கோபமாக, அதிரடியாக நடிக்கும் நயன் இப்படத்தில் அப்பாவியாக நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன், ஆர்.எஸ்.சிவாஜி உள்பட பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். பெரும்பாலான வேலைகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

காற்றின் மொழி: குண்டு கண்ணை வைத்துக்கொண்டு பலரை மிரட்டிய ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்திற்கு நடிப்பில் பெரிய ப்ரேக் எடுத்திருந்தார். வருவாரா? மாட்டாரா? என்ற பெரும் சந்தேகத்திற்கு இடையில் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து, அவர் நடிப்பில் வெளியான படம் மகளிர் மட்டும். அப்போது பார்த்தது போலவே துறுதுறுவென இருக்கும் ஜோ நடிப்பில் அடுத்து காற்றின் மொழி படம் உருவாக இருக்கிறது. பாலிவுட் திரைப்படம், `துமாரி சுலு’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தயாராகி வருகிறது. வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தை ஜோதிகா ஏற்று இருக்கிறார். சாதாரண குடும்பப் பெண்ணாக சுவாரஸ்யமில்லாத வாழ்க்கை வாழும் பெண்களுக்குப் பெரும் உத்வேகம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது, இப்படத்தின் திரைக்கதை. படத்தை ராதா மோகன் இயக்குகிறார். நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராக நடிக்கிறார்.

கா: கவர்ச்சி அல்லது அதிரடியை மட்டுமே காட்டி நடித்தவர் ஆண்ட்ரியா. நல்ல நடிப்பு, கதை தேர்வு இருந்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் இதுவரை சரியாக சோபிக்கவே முடியவில்லை. இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாக இருக்கும் படம் கா. இப்படத்தில் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராக ஆண்ட்ரியா நடிக்கிறார். முழுக்க முழுக்க காடுகளை மையமாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்தை இயக்குனர் நாஞ்சில் இயக்க இருக்கிறார். நடிகர் இளவரசு இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்.

’பெயரிடப்படாத’ ஹன்சிகா படம்:
குண்டு பேபியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தவர் ஹன்சிகா. கோலிவுட்டின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டாலும், இவருக்கு வாய்ப்புகள் என்பதோ குறைவு தான். அமுல் பேபியாக இருந்த ஹன்சிகா உடம்பை குறைத்து ரீ எண்ட்ரி கொடுத்து இருக்கிறார். எப்போதும் இல்லாமல் முதல்முறையாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தேர்வு செய்து இருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜமீல் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்தியா, மொரீஷியஸ், ஜார்ஜியா ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top