சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நான் ஏன் சாகனும்.. நீ சாவு.. இதுநாள் தான் முதலில் இதை சொல்லல.. சின்மயி சொன்ன காரணம்

பாடகி சின்மயியின் பாடல்களை கேட்டு தான், 90ஸ் கிட்ஸ் 2k கிட்ஸ் கூட வளர்ந்துள்ளார்கள். பலரின் விருப்ப பாடகியான இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த நிலையில், வைரமுத்து கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்னமே கூறாதது ஏன் என்பதற்கு சின்மயி பதில் கொடுத்திருக்கிறார்.

பிரபல பாடகியும், தொழிலதிபருமான சின்மயி அண்மையில் கொடுத்த பேட்டியில் பல விஷயங்களை கூறியிருக்கிறார். மீ டூ பற்றிய பல விஷயங்களை அவர் கூறியிருக்கிறார். அதில் முக்கியமாக, ஏன் ஆரம்பத்தில் அதை பற்றி பேசவில்லை என்பதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அவர் குடும்பத்துல உள்ள எல்லாரும்

கல்யாணம் ஆன பின்னர்தான் பொது வெளியில் வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு வந்தது. சிறு வயதில், ஊரில் நான்கு பேரில் ஒருவராக நாமும் வாழ்ந்து விட வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்ப்பார்கள். அதனால் எனக்கு சுத்தமாக தைரியம் கிடையாது.

இன்று சோசியல் மீடியாவில் நாக்கு இருக்கிறது என்று எது வேண்டுமென்றாலும் பேசுவாய், விரல் இருக்கிறது என்று எதை வேண்டுமென்றாலும் டைப் செய்வாய்; நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? அதை பற்றி எல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை

என் அம்மா உட்பட, பலரும் இதை இப்போது சொல்லாதே, உன்னை காலி செய்துவிடுவார்கள் என்று கூறினார்கள். காரணம் என்னவென்றால், அப்போதுதான் 96 படம் ரிலீஸ் ஆகியிருந்தது. படத்தினுடைய பாடல்கள், டப்பிங் என அனைத்தையும் நான் செய்திருந்தேன். படம் மிகப்பெரிய ஹிட் ஆகியிருந்தது. என்னுடைய கெரியர் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லக்கூடிய இடத்தில் இருந்தது.

அப்போது நான் சொன்னால் தான் நான் மார்க்கெட் இல்லாததால் இப்படி சொல்கிறேன் என்று கூறாமல் இருப்பார்கள். இன்று நிறைய வீட்டில் டப்பிங் தொழில் செய்து கிடைக்கும் பணத்தில் தான் அடுப்பு எரிகிறது. அதற்காக, நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டு போகிறாயா? உன்னுடைய கற்பை விட, உன்னுடைய மானத்தை விட பணம் பெரியதா? இதற்கு நீ செத்து விடலாமே என்றெல்லாம் கேட்கிறார்கள். நாங்கள் எதற்கு சாக வேண்டும். தேவை என்றால் நீ சாவு. என்று காட்டமாக பேசியுள்ளார்.

மேலும், பலரும் ஏன் இதை முதலில் கூறவில்லை என்று கேட்கிறார்கள்.. அதற்க்கு காரணம் அவர் குடும்பத்தினர்கள் தான். அவர்களது வீட்டில் உள்ள அனைவரும் என்னுடைய நண்பர்கள். அவர்கள் நல்லவர்கள் தானே. அவர்கள் இதனால் அசிங்கப்படுவார்கள் என்று எண்ணினேன்.. அதற்காகத்தான்” என்று காரணத்தை கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News