கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இணையதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியானதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். தனியார் மெடிக்கல் கல்லூரி மாணவர் ஒருவர் நாய் ஒன்றை பலமாடி கட்டிடத்தின் உயரத்தில் இருந்து தூக்கி எறிந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சம்பந்தப்பட்ட மாணவரையும், இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்த அவருடைய நண்பரையும் கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் கோலிவுட் நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்ஜே பாலாஜி தங்கள் டுவிட்டர் பக்கங்களில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். விஷால் தன்னுடைய டுவிட்டரில் ,”They don’t deserve to b doctors.inhumane.and dat kid Akshaya.am glad u survived. u Wil b da face of hope for all. Arrest them’ என்றும் ஆர்ஜே பாலாஜி தன்னுடைய டுவிட்டரில், “Dear madha medical college management, Step foward. Understand the justified anger of people.Stop them from becoming doctors.Be human என்றும் பதிவு செய்துள்ளார்.

நல்லவேளையாக கீழே தூக்கி எரியப்பட்ட அந்த நாய் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது.