2024-2025 இந்திய சினிமாவை புரட்டி போட வரும் கமலின் 5 படங்கள்.. விக்ரமை விட பல மடங்கு எகிற போகும் மார்க்கெட்

Kollywood Actor Ulaganayagan kamal lineup of films in 2024 and 2025: உலக நாயகன்  கமலஹாசன் தனது படங்களின் வாயிலாக மக்களுக்கு தேவையான கருத்துக்களை சமூக அக்கறையுடன் மறைமுகமாக கூறி புரிய வேண்டியவர்களுக்கு புரிய வைத்து சபாஷ் போட வைத்து விடுவார். இவர் படங்களின் ட்ரெய்லரையே பலமுறை பார்த்த ரசிகர்களுக்கு இந்திய சினிமாவையே புரட்டி போட வரும் கமலின் படங்கள் குதூகலத்தை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படம் மூலம் உலக நாயகன் கமலஹாசனை திரையில் தரிசித்து ஆனந்த கூத்தாடினர் ரசிகர்கள்.  எதிர்பார்த்ததை விட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று  கமலஹாசனை உச்சாணி கொம்பில் கொண்டு சேர்த்தது.

தற்போது அதைவிட அதிகமாக பிரம்மாண்ட பட்ஜெட், பிரம்மாண்ட இயக்குனர்கள் என பலருடன் கைகோர்த்து 2024-2025 ஆண்டுகள் வரை தரமான லைன்அப் உடன் பிஸியாக உள்ளார் உலகநாயகன் கமல்.

இந்தியன் 2 மற்றும் 3: சங்கரின் இயக்கத்தில் ஏற்கனவே இந்தியன் 2 வை முடித்து உள்ள நிலையில் இந்தியன் 3யையும் முடித்து இந்த ஆண்டில் இரண்டையும் ஒரு சேர வெளியிட்டு சாதனை பண்ண போகிறார் கமல். இயக்குனர் சங்கரோ யாவரும் எதிர்பார்க்க முடியாத அளவு இப்படத்தில் டெக்னாலஜியில் பின்னி இருக்கிறாராம்.

Also read: மகா கலைஞன் என நிரூபித்த கமல்.. இறந்த நண்பருக்காக உலகநாயகன் செய்யும் தரமான சம்பவம்

தக் லைப்: மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்க உள்ள படம் தக் லைப்.  இப்படத்தைப் பற்றி கமலிடம் கேட்டதற்கு இப்ப யாராவது ஏதாவது ஸ்பெஷலா செஞ்சா தக்கலை போடுறீங்க இல்ல, அதே மாதிரி தான் இதுவும் ரசிகர்களுக்கு என்னோட ஸ்பெஷல் என்று ஒரு போடு போட்டு உள்ளார் ஆண்டவர்.

KH237:  விக்ரம் படத்தின் ஸ்டண்ட் கலைஞர் அன்பறிவு சகோதரர்கள் KH 237 மூலம் இயக்குனர்களாக அறிமுகமாக உள்ளனர். தேசிய விருது பெற்ற இச்சகோதரர்கள்  கமலுக்காக தரமான ஆக்சன் திரில்லர் கதையை ரெடி பண்ணி உள்ளனராம். இப்படம் 2025 இல் ஆரம்பிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கல்கி 2898AD: நாக அஸ்வின் இயக்கத்தில் அறிவியல் புனை கதைகளை மையமாக வைத்து பிரபாஸ், கமலஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பான் இந்தியா படமாக தயாராகிறது கல்கி. இரண்டு பாகங்களாக வெளிவரவிற்கும் இப்படத்தில் ஒரு பாகத்தை முடித்துள்ளனர். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 150 கோடி சம்பளம் பெறும் கமலஹாசன் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக தகவல்.

Also read: 50 வருடமா சினிமாவிற்காக ஓடிக்கொண்டிருக்கும் 5 நடிகர்கள்.. கொல செய்ய நினைத்தவரையே கொண்டாடிய கமல்

- Advertisement -spot_img

Trending News