Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோலிவுட் ஸ்டார்கள் நடிப்பில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளின் ஒரு சில படங்களின் அறிவிப்பு பிரம்மாண்டமாக அமையும். ஆனால், பட வேலைகளோ கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கும். ஒரு கட்டத்தில் ரசிகர்களே இப்படி ஒரு படம் அறிவிக்கப்பட்டதை மறந்து விடுவார்கள். அப்படி கிடப்பில் இருக்கும் ஸ்டார் நட்சத்திரங்களின் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு…

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த சபாஷ் நாயுடு. இப்படம் தசாவதாரம் படத்தின் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படுகிறது. அப்பா கமலுடன் ஸ்ருதி ஹாசன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சில நாட்கள் இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் நடைபெற்றது. ஆனால் கமலுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் சரியாகி அரசியலிலே ஓடிக்கொண்டு இருக்கிறார் இன்னமும் இதன் வேலைகள் தொடங்கப்படவில்லை. இந்தியன் 2 படத்திற்கு முன்னர் இப்படம் தயாராகி வெளியிடப்படலாம் என்ற கருத்தும் கோலிவுட்டில் நிலவுகிறது.

பிரம்மாண்ட படைப்பாக உருவாக இருந்த சங்கமித்ரா. தமிழில் ஒரு பாகுபலி என பலரும் மெச்சிக்க தொடங்கினார். சுந்தர் சி இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முதலில் சங்கமித்ராவாக ஸ்ருதி நடிக்க இருந்தார். ஆனால், என்ன காரணமோ சில நாட்களில் படத்தில் இருந்து விலகினார். பாலிவுட் நடிகை திஷா பதானி ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மார்ச் மாதத்தில் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்பட்டு இருந்த நிலையில், இன்னும் கப்சிப் நிலை தான்.

நாயகி முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகமாக தேர்வு செய்து நடித்து வருபவர் நயன்தாரா. சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்க இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து, பாலிவுட்டின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்ஸுடன் தயாரிப்பதாக இருந்தது. ஏறத்தாழ படத்தின் 90 சதவீத படப்பிடிப்புகள் முழுக்க இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. நயனும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் படம் ரிலீஸாகும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

நடிகர் சிம்பு நடிப்பில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் கான். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. புதிய கூட்டணி என்பதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவியது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்தும் திடீரென படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.

இந்தியாவையே உலுக்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்று கொண்டு இருந்த சமயத்தில் சந்தனத்தேவன் படத்தின் அறிவிப்பு வெளியானது. அமீர் இயக்கத்தில் படத்தின் சில நாட்கள் படப்பிடிப்பும் நடைபெற்றது. படத்தில் ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று படத்தின் பாடல் மற்றும் பர்ஸ்ட் லுக்கோடு படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகவில்லை.
விஷ்ணு விஷால் நடிப்பில் தமன்னா இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் பொன் ஒன்று கண்டேன்.

இப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளிவந்த ‘பெல்லி சூப்புலு’ படத்தின் ரீமேக் என அறிவிக்கப்பட்டது. பர்ஸ்ட் லுக் வெளியாகினாலும், படத்தில் இருந்து விஷ்ணு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து படத்தின் வேலைகள் பாதியிலேயே நிற்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதைப்போல, ஸ்டார் நாயகர்களின் படங்கள் மட்டுமல்லாது பல நல்ல படங்கள் கூட சில காரணங்களால் படப்பிடிப்பு கூட நடைபெறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top