ஆளவந்தான் போல அபூர்வ சகோதரர்களும் பிளாப் ஆகிருக்க வேண்டியது.. சாதுரியமாக கமலை தூக்கி விட்ட இயக்குனர்

Kollywood Actor Kamal play 3 role in apoorva sagotharargal: உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக கொடுத்து விட வேண்டும் என்பதில் முனைப்புடன் இருப்பார். ஆனால் அது சில சமயங்களில் ரசிகர்களுக்கு புரியாத புதிராகி விடுகிறது என்பது வேறு கதை. அப்படி ஒரு சில படங்கள் எதிர்மறையான விமர்சனங்களுடன் வசூலிலும் வெற்றி பெறாமல் போயிருந்தன. கமலுக்காக இம்மாதிரியான நிலைமையை ஒரு படத்தில் மாற்றி அமைத்தார் ஒருவர்.

சிங்கீதம்சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் மூன்று வேடத்தில் நடித்து1989 இல் வெளிவந்த படம் அபூர்வ சகோதரர்கள். ஜூனியர், சீனியர்ஸ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தது. நகைச்சுவைக்கு குறைவு வைக்காமல் சர்க்கஸ் மிருகங்களையும் கதாபாத்திரங்களாக உள் நுழைத்து பலரையும் கவனத்தை ஈர்த்திருந்தனர் இந்த அபூர்வ சகோதரர்கள்.

தந்தை சாவுக்கு தனயன்கள் பழி வாங்கும் கதை. கமல் தன்னை ஈர்த்த சார்லி சாப்ளின் குள்ளமான வேடத்தை அடி ஒட்டி புன்னகை மன்னனில் ஒரு சில காட்சிகளுடன் நடித்து முடித்து இருந்தார். கமல்ஹாசன் இதையே கொஞ்சம் நீட்டித்தால் என்ன? என்று முயற்சி பண்ணியது தான் அபூர்வ சகோதரர்கள். முதல் பத்து நாட்கள் ஷூட்டிங் நடத்தி அதில் பல எதிர்மறையான விமர்சனங்கள் வரவே கமல் அதை சகலகலா வல்லவன் கதை எழுதிய பஞ்சு அருணாச்சலத்திடம் படத்தை போட்டு காண்பித்தார்.

Also read: ஆளவந்தானிடம் சிக்கிக் சின்னா பின்னமான முத்து.. வசூலில் சாதனை படைத்த கமல்

தயாரான சில பகுதிகளை மட்டுமே பார்த்த பஞ்சு அருணாச்சலம் கதையின் கருவை மட்டும் வைத்துவிட்டு  குள்ளமான அப்புவுக்கு ஏற்ப மொத்த திரைக்கதையையும்  மாற்றி  படத்தில் உள்ள அபூர்வ சகோதரர்களை மெருகேற்றினார். கமல்ஹாசன் மற்றும்  இயக்குனருக்கும் பிடித்து போக பஞ்ச அருணாச்சலத்தின் கதையே திரைக்கதை ஆக்கப்பட்டது.

படம் வெளிவந்து பல நாட்கள் ஓடிய நிலையில் நேர்மறையான விமர்சனங்களுடன், மக்களின் ஆச்சரியத்துடனும் வசூலில் சக்கை போடு போட்டது. எந்த ஒரு கிராபிக்ஸும் மேலோங்காத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தைப் பற்றி பல ரகசியத்தை இன்று வரை கமல் உடைக்க மாட்டாமல் உள்ளார்.

இன்று பலரும் கொண்டாடும் அபூர்வ சகோதரர்கள் படம் கமலின் பழைய கதையில் இருந்தால் எடுத்திருந்தால் அபூர்வ சகோதரர்கள் இன்னொரு ஆளவந்தானாக மாறி இருந்திருப்பார்கள். வசூலில் சோலியை முடித்து இருப்பார்கள். பஞ்சு அருணாச்சலத்தின் குறுக்கிட்டாலே  கமலின் அப்புவை மனதார விரும்ப முடிந்தது. அபூர்வ சகோதரர்களை கொண்டாட முடிந்தது.

Also read: அறிவுள்ள கமல் பேசிய அநாவசிய பேச்சு.. ஆழ்வார்பேட்டைக்காரரின் அறிவு கூவல்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்