மனைவி யாரிடம் பேசுகிறார், யார் அவருக்கு போன் போடுகின்றனர், மெஸேஜ் அனுப்புகின்றனர் என உளவு பார்த்த கணவருக்கு நீதிமன்றம் 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

அந்த தம்பதிக்கு 2003 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் கணவருக்கு மனைவி மீது சந்தேகம் எழ, சில மாதங்களில் இருவரும் பிரிந்தனர்.

அதிகம் படித்தவை:  ரஜினி முருகன், ரெமோ, சிவ கார்த்திகேயன், விஷால்... திருப்பூர் சுப்ரமணியம் ஓப்பன் டாக் #வீடியோ

மகிழ்ச்சியாக இருந்த நேரத்தில் மனைவியின் செல்போனை வாங்கிய கணவர் அதில் ஒரு சாப்ட்வேரை இண்ஸ்டால் செய்தார். அப்போதில் இருந்து அந்த போனிற்கு வரும் கால்கள், மெஸேஜ்கள் அனைத்தும் இவருக்கு தெரியவந்தது.

ஒரு கட்டத்தில் இதனை தெரிந்து கொண்ட மனைவி காவல்துறையிடம் புகார் செய்தார். தனது பிரைவேஸியில் தலையிட்டதாக குற்றம்சாட்டினார்.

அதிகம் படித்தவை:  இணையத்தில் வைரலாகுது பள்ளி மாணவர்கள் எடுத்துள்ள அவென்ஜ்ர்ஸ் - இன்பினிட்டி வார் ட்ரைலர் !

இருவரும் விவகாரத்து கோரிய மனு நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் இருந்த நிலையில் நீதிபதி ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

கணவருக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி. 30 நாட்களுக்குள் இந்த தொகையைச் செலுத்த  வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.