கோலமாவு கோகிலா படத்திலும் நானும் ரவுடி தான் படத்தை போல நயன்தாரா மாற்றுத் திறனாளியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

கோலிவுட்டில் பல சர்ச்சைகளை தாங்கி இன்னமும் தொடர்ந்து நட்சத்திர நாயகியாக ஜொலித்து வருபவர் நயன்தாரா. 2005ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவருக்கு இரண்டாம் படத்தில் மாஸ் வாய்ப்பு கிடைத்தது. சந்திரமுகி படத்தில் ஜோதிகா இருந்தும் ரஜினிகாந்தின் ஜோடியாக களம் இறங்கினார். யார் இந்த பெண் தான் என பலரும் புருவம் உயர்த்த வைத்தார். ஆனால், நடிகர் சிம்புவுடன் காதல். இவருக்கு பெரிய சறுக்கலாக அமைந்தது. தொடர்ந்து, இருவரும் இருக்கும் நெருக்கமான ஸ்டில்கள் வெளியாகியது. இருந்தும், இருதரப்பிடமும் எந்தவித தகவலோ, மறுப்போ வெளியாகவில்லை.

இதையடுத்து, நயன் தமிழ் சினிமாவில் வந்த வாய்ப்புகளை தவிர்த்தார்.
தொடர்ந்து, ரீ எண்ட்ரியாக ஒல்லி பெல்லியுடன் சிவாஜி படத்தில் ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடினார். இங்கு தான் நயனின் கிராப் எகிறியது. பல வாய்ப்புகள் அவருக்கு வந்தது. அதிலும், நடிகர்களுடன் மட்டும் ஜோடி போட்டு வந்தவர். கடந்த சில வருடங்களாக சிங்கிள் நாயகியாக சீன் காட்டி வரும் நயன், தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார். இப்போது கைவசம் இமைக்கா நொடிகள், அறம் – 2, அஜித்துடன் விஸ்வாசம், லட்சுமி குறும்பட இயக்குநர் சர்ஜூனின் அடுத்த படம், சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களை வைத்து இருக்கிறார்.

இதில், கோலமாவு கோகிலா படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹீரோயினை மையமாகவே வைத்து நகரும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் என்கிற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். படத்துக்கு வலு சேர்க்கும் வகையில் அனிருத் இசையமைப்பாளராக இருக்கிறார். விரைவில் இப்படத்தின் அறிவிப்பு தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தில் நயன் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். முன்னதாக, நானும் ரவுடி தான் படத்திலும் காது கேட்காத பெண்ணாக அவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.