லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கோலமாவு கோகிலா படத்திற்காக அனிருத் இசையமைப்பு பணியில் படு பிஸியாக இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Nayanthara
Nayanthara

தமிழ் சினிமாவில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நயன்தாரா. இதனால், அவரை ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என புகழ்ந்து வருகிறார்கள். எத்தனை கஷ்டங்கள், சர்ச்சைகள் வந்தபோதும் அதனை தகர்த்தெறிந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியவர். தற்போது இவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்கள் பெரும்பாலும் பெண்களை முன்னிலைப் படுத்துவதாகவே அமைந்து வருகிறது.

அதிகம் படித்தவை:  அட இது நம்ம பிக்பாஸ் சுஜாவா.! என்ன இப்படி மாறிட்டாங்க.! புகைபடம் உள்ளே

கடந்த வருடம் நாயகியாக வேலைக்காரன் படத்திலும், நாயகி முக்கியத்துவம் உள்ள டோரா மற்றும் அறம் படத்தில் நடித்தார். அதிலும், அறம் படம் அவருக்கு வெற்றி மகுடத்தில் ஒரு முத்து என்றே சொல்ல வேண்டும். இந்த வருடம் இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய மூன்று படங்களும் நாயகி முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் கோலமாவு கோகிலா படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக தயாராகி வருகிறது. இப்படத்தில் அனிருத் இசையமைக்கிறார். இதை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் இசையமைக்க இருக்கிறார்.

அதிகம் படித்தவை:  டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு

இதனால், கோலமாவு கோகிலாவின் இசையமைப்பு பணிகளை மும்முரமாக இரவு பகல் பார்க்காமல் செய்து வருகிறாராம். அதுபோல, நயன்தாராவிற்கு ஏற்ப பாடல்களை அமைப்பதற்காக எந்த ரிஸ்கும் எடுக்காமல் என்ஜாய் செய்து இசையமைப்பு பணிகளை செய்து வருகிறாராம். இதுவரை 5 பாடல்களை முடித்த அனிருத், இன்னும் ஒரு பாடலுக்கான வேலையை மட்டும் மிச்சம் வைத்துள்ளார். இதை தொடர்ந்து, அடுத்த மாதத்தில் ஒரு சிங்கிள் மட்டும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். லைகா புரோடக்‌ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.