யாரு அந்த கோலமாவு கோகிலா?

தமிழ் சினிமா தலைபிற்கும் அதன் கதைக்கும் எப்போதும் சம்பந்தமிருக்கிறது என்பதை மற்றுமொரு முறை நிரூபிக்க வரப்போகும் திரைப்படம்தாங்க இந்த கோ கோ என்னும் கோலமாவு கோகிலா.

பேரை கேட்டவுடன் உங்களுக்கு எந்த மாதிரி படமா இருக்கும்னு ஒரு கற்பனை ஓடிருக்கும் அதை அப்படியே நிப்பட்டிகுங்க. இது ஒரு கிரைம் படம், கொஞ்சம் காமெடி கலந்த படமாகவும் இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. சரி ரொம்ப இழுக்காமல் நேரடியா செய்திக்கு வருவோம்.

coco movieஅறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்புல வெளிவர உள்ள திறப்படம்தாங்க. கோலமாவு கோகிலா. இதுல கோகிலாவ நடிக்க போறது நம்ம கனவு கன்னி நயன்தாரா. இந்த படத்தோட படப்பிடிப்பு வரும் புதன் கிழமையன்று துவங்கவிருக்கு.

முழுப்படத்துலயும் நயந்தாராவோட சேர்ந்து கலக்கப் போறது நம்ம நகைச்சுவை நடிகர் யோகி பாபு. இவங்களோட சரண்யா பொன்வண்ணன் அவர்களும் நடிக்கிறாங்களாம். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும்னு இதன் இயக்குனர் சொல்லிருக்காரு.

Nayantaraபடத்தோட தலைப்பை வெளியிட்டது யார் தெரியுமா நம்ம சிவகார்த்திகேயன்தாங்க. அதுமட்டுமில்லை படத்துவக்க விழாவும் இவர் தலைமைலதான் நடக்க போகுதுன்னு சொல்றாங்க.

படத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்னு தெரியலை. ஒரு வேளை இவரே இந்த படத்தோட ஹீரோவா இருந்தாலும் இருக்கும்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: இதே மாதிரி தலைப்பை வடிவேலு ஜோக்ல கேட்ருகோமே…. அட நம்ம குடமுருட்டி கோகிலா…

Comments

comments

More Cinema News: